|
(வி - ம்.) எனவே, இருமைக்கும் பயன் கூறினாள். முன்பு திருவனையாள் என்க. ”சிறுவர்களில் நால்வர் உலகாளுதற்குரிரயல்லரேனும் தம் குலத்தொழிற்கேற்ப உலகாளுதற்குரியரென்பது பற்றி, 'உலகாளும் சிறுவர்' என்றாள். 'மெய்தெரிவகையின் எண்வகை உணவின் (தொல். மரபு. 78) எனவும், 'கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே' (தொல். மரபு. 79) எனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுது பயன் கோடலும், அரசன் கொடுத்த சிறப்புக்களும் மன்றித் தன் புதல்வராதலின், அரசாட்சி முதலியன கொடுப்ப, அவர் தாமும் தம் வழித்தோன்றினோரும் ஆள்வரென்றுணர்க” - என்பர் நச்சினார்க்கினியர்.
|