| முத்தி இலம்பகம் |
1478 |
|
|
|
(வி - ம்.) கற்சிறை - கல்லணை. இது சான்றோர் கூறிய அறவுரைக்கு உவமம். வேந்தன் : சச்சந்தன். துறத்தல் செல்லான் : ஒரு சொல். நற்சிறை என்புழி நன்மைப்பண்பு கொடுமைப் பண்பின்மேனின்றது. நல்ல பாம்பு என்றாற்போல.
|
( 14 ) |
| 2613 |
பிளிறுவார் முரசத் தானைப் | |
| |
பெருமகன் பிழைப்பு நாடிக் | |
| |
களிறுமென் றுமிழப் பட்ட | |
| |
கவழம்போற் றகர்ந்து நில்லா | |
| |
தொளிறுவேற் சுற்ற மெல்லா | |
| |
முடைந்தபி னொருவ னானான் | |
| |
வெளிறுமுன் வித்திப் பின்னை | |
| |
வச்சிரம் விளைத்த லாமோ. | |
|
|
(இ - ள்.) பிளிறு வார் முரசத்தானைப் பெருமகன் பிழைப்பு நாடி - ஒலிக்கும், வாராலிறுகிய முரசுடைய தானையானாகிய அரசன் பிழையை எண்ணி; ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் - விளங்கும் வேலையுடைய அமைச்சர் முதலான சுற்றத்தார் எல்லோரும்; களிறுமென்று உமிழப்பட்ட கவழம்போல் தகர்ந்து - களிற்றினால் மென்று உமிழப்பட்ட உணவுபோலச் சிதறி; நில்லாது உடைந்தபின் - நிற்காமல் நீங்கிய பிறகு; ஒருவன் ஆனான் - அரசன் தனித்தவன் ஆனான்; முன் வெளிறு வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தல் ஆமோ? - முதலிற் பயன் அற்ற தீவினையை விதைத்துப் பின்னர்ப் பயனுடைய நல்வினையை விளைவித்தல் இயலாதன்றோ?
|
|
(வி - ம்.) வேற்றுப்பொருள் வைப்பணி. 'ஆமணக்கு நட்டு ஆச்சா வாக்கலாகாது' என்பது பழமொழி.
|
( 15 ) |
| 2614 |
வனைகலக் குயவ னாணின் | |
| |
மன்னரை யறுத்து முற்றிக் | |
| |
கனைகுர லுருமி னார்ப்பக் | |
| |
காவல னின்னை வேண்டி | |
| |
வினைமயிற் பொறியி னென்னைப் | |
| |
போக்கிவிண் விரும்பப் புக்கான் | |
| |
புனைமுடி வேந்த போவல் | |
| |
போற்றென மயங்கி வீழ்ந்தான். | |
|
|
(இ - ள்.) வனைகலக் குயவன் நாணின் - வனைகலத்தைக் குயவன் தன்நாணலே அறுத்தல்போல; மன்னரை அறுத்து - வேந்தரைக் கீழறுத்துத் (தன் சுற்றத்தாராக்கிய பின்); முற்றி -
|