| முத்தி இலம்பகம் |
1481 |
|
|
|
(வி - ம்.) ஈண்டு 'உமைத்துழிச் சொறியப் பெற்றாம்' என்பது விழுங்குதற்கு வாய்க்கொண்ட காலம் சிறிது பொழுது விழுங்காதிருக்கவும் பெற்றோமாதலின் ஈண்டுத் தவம் செய்து கோடுமென எழுந்த மனவெழுச்சிக் கண்ணே அதனை முற்ற முடித்துக் கொள்ளப் பெற்றே மென்றவாறாம்.
|
( 19 ) |
| 2618 |
கடுவளி புடைக்கப் பட்ட | |
| |
கணமழைக் குழாத்தி னாமும் | |
| |
விடுவினை புடைக்கப் பாறி | |
| |
வீற்றுவீற் றாயி னல்லா | |
| |
லுடனுறை பழக்க மில்லை | |
| |
யொழிமதி யத்தை காதல் | |
| |
வடுவுடைத் தென்று பின்னு | |
| |
மாபெருந் தேவி சொன்னாள். | |
|
|
(இ - ள்.) கடுவளி புடைக்கப்பட்ட - கொடிய காற்றால் மோதப்பட்ட; கணமழைக் குழாத்தின் - திரளாகிய முகில் நிரைபோல; விடுவினை புடைக்க - தீவினை தாக்குதலால்; நாமும் பாறி வீற்றாயின் அல்லால் - நாமும் சிதறித் தனித்தனியே போவதல்லாது; உடன் உறை பழக்கம் இல்லை - ஓரிடத்திலே வாழும் பழக்கம் அதற்கு இல்லை; வடுவுடைத்து - (இத்தகைய) குற்றமுடையது (ஆதலால்); காதல் ஒழி - காதலை நீங்குவாயாக!; என்று - என்றுரைத்து; பின்னும் மாபெருந்தேவி சொன்னாள் - மேலும் விசயை கூறினாள்.
|
|
(வி - ம்.) மதி, அத்தை : அசைகள்.
|
|
வளி - காற்று. கணம் - திரள். விடுவினை - போகூழ். பாறி - சிதறி. மாபெருந்தேவி : விசயை.
|
( 20 ) |
வேறு
|
| 2619 |
யிருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக் | |
| |
கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியு முன்னே | |
| |
யருந்தவமுந் தானமு மாற்றுமினே கண்டீர். | |
| |
முருந்தனைய தூமுறுவன் முற்றிழையார் சேரி | |
| |
|
|
(இ - ள்.) முருந்து அனைய தூமுறுவல் முற்றிழையார் சேரி - மயிலின் இறகு அடியைப் போன்ற தூய முறுவலையுடைய அணிகல மணிந்த மகளிர் சேர்ந்த இடத்தே; இருந்து இளமைக் கள் உண்டு - இருந்து இளமையாகிய கள்ளைப் பருகி; இடை தெரிதல் இன்றி - அறம் முதலியவற்றை அறிதல் இன்றி; கருந்தலைகள் வெண்தலைகளாய்க் கழியும் முன்னே - கரிய
|