| முத்தி இலம்பகம் |
1482 |
|
|
|
தலைகள் நரைத்து இறந்துபடுதற்கு முன்னே; அருந்தவமும் தானமும் ஆற்றுமின் - அரிய தவமும் தானமும் செய்யுங்கோள்.
|
|
(வி - ம்.) கண்டீர்: வினாவொடு சிவணாது நின்ற அசை.
|
|
முருந்து மயிலிறகின் அடிப்பகுதி. முறுவல் பல். இளமையின்பமாகிய கள் என்க. என்றது காமநுகர்ச்சியை. கருந்தலைகள் வெண்டலைகளாய்க் கழியுமுன் என்றது, இளமை தீர்ந்து மூப்பெய்திச் சாதற்குமுன் என்றவாறு
|
( 21 ) |
| 2620 |
உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட் | |
| |
டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக் | |
| |
குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே | |
| |
கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர். | |
| |
|
|
(இ - ள்.) உடற்றும் பிணித்தீ உடம்பின் - வருத்தும் நோயாகிய தீயையுடைய உடம்பிலே; உயிர் பெய்திட்டு - உயிரைச் சோறாக முன்னே பெய்திட்டு; அடுத்து உணர்வு நெய்யாக - பின்னர் உணர்வு நெய்யாக; ஆற்றல் துவையாக - ஆற்றலைத் துவையலாகக் கூட்டி; கூற்றம் குடித்து உண்ணும் - கூற்றுவன் உயிரைக் குடித்து உண்பான்்; 'குடில் பிரியா முன்னே - (ஆகவே) உயிர் குடிலை விட்டு நீங்குவதற்கு முன்னே : கொடுத்து உண்மின் - கொடுத்து உண்ணுங்கோள்; குணம்புரிமின் - நற்பண்பை விரும்புமின்.
|
|
(வி - ம்.) உயிர்போவதற்கு முன்னே உணர்வும் ஆற்றலும் தேய்தல் இயல்பு.
|
|
பிணித்தீ - பிணியாகிய நெருப்பு. பெய்திட்டு ஒரு சொல். ஆற்றல் - வலிமை. துவை - துவையல்; ஒருவகைக்கறி. குடித்துண்ணும்; ஒரு சொன்னீர்மைத்து. குடில் - ஈண்டு உடம்பு.
|
( 22 ) |
| 2621 |
உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்த றேற்றா | |
| |
திழந்தார் பலரா லிடும்பைநீர் யாற்று | |
| |
ளழுந்துமா லப்பண்டி யச்சிறா முன்னே | |
| |
கொழுஞ்சீலங் கூலியாக் கொண்டூர்மின் பாகீர். | |
| |
|
|
(இ - ள்.) பாகீர் - (உடம்மை நடத்தும்) பாகர்களே!; உழந்தாலும் புத்தச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது - (உடலாகிய வண்டி) தொழில் செய்து பழையதாகி வருந்தினாலும் புதிய அச்சு ஒன்றை இட்டு நடத்த அறியாமல் இழந்தார் பலர் அவ்வுடல் வண்டியை இழந்தவர் பலர்; இடும்பை நீர் யாற்றுள் - துன்பமாகிய நீரையுடைய ஆற்றிலே; அப்பண்டி அழுந்தும் -
|