| முத்தி இலம்பகம் |
1483 |
|
|
|
அவ்வண்டி அழுந்தும்; அச்சு இறா முன்னே - பழையதாகி அச்சு ஒடிவதற்குமுன்; கொழுஞ்சீலம் கூலி ஆக் கொண்டு ஊர் மின் - நல்ல ஒழுக்கத்தை அவ்வண்டியை ஓட்டும் பயனாகக் கொண்டு செலுத்துமின்.
|
|
(வி - ம்.) புதிய அச்சு இட்டு ஊர்தல் இயலாதாகலின் 'தேற்றாது' என்றார். அச்சு : உயிர், புதிய அச்சு இடாமையாற் பழைய அச்சுள்ள வரை (வாழ்நாள் வரை) வண்டி ஓடும். எனினும், இடும்பையாகிய ஆற்றிற் செல்லும்போது வண்டி அழுந்தி அச்சுத் தேயாமுன்னரே ஒடிதலும் உண்டு. எனவே, அச்சுத்தேய்ந்தோ, இடும்பை யாற்றில் அழுந்தி ஒடிந்தோ போகுமுன்னரே வண்டியை ஓட்டுதற்குரிய கூலியைப்பெறுதல் வேண்டும்.
|
( 23 ) |
| 2622 |
பிறந்தவர்க ளெல்லா மவாப்பெரிய ராகித் | |
| |
துறந்துபுகழ் வேண்டாரோர் துற்றவிழு மீயா | |
| |
ரறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறி யாரேல் | |
| |
வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள். | |
| |
|
|
(இ - ள்.) பிறந்தவர்கள் எல்லாம் அவாப் பெரியராகி - பிறந்த மக்கள் எல்லோரும் பேராசையுடையராய் - புகழ் வேண்டார் துறந்து - புகழை விரும்பாமல் அதனைத் துறந்து; துற்று ஓர் அவிழும் ஈயார் - உண்ணப்படுவதாகிய ஒரு சோற்றவிழையும் கொடாராய்; அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல் - அறம் கரியதோ செய்யதோ என்பதைச் சிறிதும் அறியாரெனின்; அது வெறும் பொருள் - அந்த ஆவல் பயன் இல்லாத பொருள்; விடுத்திடுமின் என்றாள்- எனவே, என்னைத் துறவு பூண விடுத்திடுக என்றாள்.
|
|
(வி - ம்.) அம்மா : இரக்கக் குறிப்பு.
|
|
அவாப் பெரியர் என்றது பேராசையுடையராய் என்றவாறு. ”ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து, வேண்டும் பனுவல் துணிவு” என்பது பற்றி, 'துறந்து புகழ் வேண்டார்' என்றாள். ”அறங்கறுப்போ சேப்போ யானறியேன்” என்பது ஓர் உலகவழக்கு. ஒருசிறிதும் அறியாதாராய் என்பது கருத்து. வெறும் பொருள் - பயனில்லாப் பொருள்
|
( 24 ) |
வேறு
|
| 2623 |
முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய | |
| |
பாலடிசின் மகளி ரேந்த | |
| |
நல்ல கருனையா னாள்வாயும் | |
| |
பொற்கலத்து நயந்துண் டார்க | |
| |
|