பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1484 

2623 ளல்ல லடைய வடகிடுமி
  னோட்டகத்தென் றயில்வார்க் கண்டுஞ்
செல்வ நமரங்கா ணினையன்மின்
  செய்தவமே நினைமின் கண்டீர்.

   (இ - ள்.) முல்லை முகை சொரிந்தாற்போன்று இனிய பால் அடிசில் - முல்லை அரும்பைப் பெய்தாற்போல் இனிய பாற்சோற்றை; மகளிர் ஏந்த - பணிப்பெண்கள் ஏந்தி நிற்க; நல்ல கருனையால் நாள்வாயும் பொற்கலத்து நயந்து உண்டார்கள் - தூய பொரிக்கறியுடன் நாடோறும் பொன்னாலான கலத்திலே விரும்பி உண்டவர்கள்; அல்லல்அடைய - தீவினையால் வறுமைத் துன்பம் அடைதலால்; ஓட்டகத்து அடகு இடுமின் என்று - ஓட்டிலே கீரைக்கறியை இடுங்கோள் என்று வேண்டிப் பெற்று; அயில்வார்க் கண்டும் - உண்பவரைப் பார்த்தும்; நமர்காள்! - சுற்றத்தீர்!; செல்வம் நினையன்மின்!- செல்வத்தை நினையாதீர்; செய்தவமே நினைமின் - செய்தற்குரிய தவத்தையே நினைப்பீராக.

   (வி - ம்.) நமரங்காள் : அம் : அசை.

   முல்லைமுகை அடிசிலுக்கு நிறமும் வடிவமும் பற்றிவந்த உவமை. கருனையான் என்புழி ஆன்உருபு ஒடுவின் பொருட்டு. நாள்வாயும் - நாள்தோறும். அயில்வார் - உண்பார், அடகு - இலைக்கறி. இதுமுதல், மூன்று செய்யுள் செல்வநிலையாமை கூறுவன.

( 25 )
2624 அம்பொற் கலத்து ளடுபா
  லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின்
  வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சை
  யெனக்கூறி நிற்பாட் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்கா
  ணல்லறமே நினைமின் கண்டீர்.

   (இ - ள்.) அம் பொன் கலத்துள் அடுபாலை அமர்ந்து உண்ணா அரிவை - அழகிய பொற்கலத்திலே, காய்ச்சிய பாலை விரும்பிப் பருகாத அரிவையாள்; அந்தோ! - ஐயோ!; வெவ்வினையின் வேறாய் - கொடிய வினையினால் வேறுபட்டு; பசி வெம்பி நலிய ஓர் அகல் கை ஏந்தி - பசி வெம்பி வருத்தலாலே, ஒரு மண் கலத்தைக் கையில் ஏந்தி; கொம்பின் கொள ஒசிந்து - மலர்க்கொடிபோல இடை நுடங்கி; பிச்சை எனக் கூறி நிற்பாள் கண்டும் - பிச்சை இடுமின் என்று வேண்டி நிற்பவளைக் கண்டு வைத்தும்; நமர்காள்! - உறவினரே!; செல்வம் நம்பன