| முத்தி இலம்பகம் |
1485 |
|
|
|
மின் - செல்வத்தை நம்பாதீர்; நல் அறமே நினைமின்! - தூய அறத்தையே நினைப்பீராக!
|
|
(வி - ம்.) அடுபால் - காய்ச்சிய பால். அமர்ந்து - விரும்பி. உண்ணா - உண்ணாத. அந்தோ : இரக்கக் குறிப்பு. வெவ்வினை - தீவினை. செல்வம் நம்பன்மின் என மாறுக.
|
( 26 ) |
| 2625 |
வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட் | |
| |
டழுவதுபோல் வருந்து மல்கு | |
| |
னண்ணாச் சிறுகூறை பாகமோர் | |
| |
கைபாக முடுத்து நாளு | |
| |
மண்ணாந் தடகுரீஇ யந்தோ | |
| |
வினையேயென் றழுவாட் கண்டு | |
| |
நண்ணன்மின் செல்வ நமரங்கா | |
| |
ணல்லறமே நினைமின் கண்டீர். | |
|
|
(இ - ள்.) வண்ணத்துகில் உடுப்பின் வாய்விட்டு அழுவது போல் - அழகிய ஆடையை உடுப்பின் வாய்திறந்து அழுவதைப் போல; வருந்தும் அல்குல் - நையும் அல்குலிலே; நண்ணாச் சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து - பிறர் அணுகாமல் அருவருக்கும் சிறு கூறை ஒரு பாதியும் ஒரு கை ஒரு பாதியுமாக உடுத்து; அண்ணாந்து அடகு உெரீஇ - மேனோக்கிக் கீரையை உருவியவாறு; அந்தோ வினையே என்று - ஐயோ ‘கொடுவினையே‘ என்று; நாளும் அழுவாள் கண்டும் - ஒவ்வொரு நாளும் அழுகின்றவளைக் கண்டிருந்தும்; நமர்காள்! செல்வம் நண்ணன்மின் - சுற்றத்தீர்! செல்வத்தை அணுகாதீர்; நல் அறமே நினைமின்! - நல்லறத்தையே எண்ணுமின்!
|
|
(வி - ம்.) இதுவரை கூறிய அறம் பொதுவானது.
|
|
வண்ணம் - அழகு. பிறரால் நண்ணப்படாத என்க. கூறை - ஆடை. ஓர்பாகம் கூறையும் ஓர்பாகம் கையுமாக உடுத்து என்க. உெரீஇ - உருவி.
|
வேறு
|
| 2626 |
மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப | |
| |
மல்லிகைமென் மாலை சூடிக் | |
| |
கைதிரண்ட வேலேந்திக் காமன்போற் | |
| |
காரிகையார் மருளச் சென்றா | |
| |
ரைதிரண்டு கண்டங் குரைப்பவோர் | |
| |
தண்டூன்றி யறிவிற் றள்ளி | |
| |
நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு | |
| |
மிளமையோ நிலையா தேகாண். | |
|