|  முத்தி இலம்பகம் | 
 1488  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) என்ப : அசை. 
 | 
| 
    நன்மயிற் பொறியின்மேற் போயநாள் என்றது சச்சந்தன் பட்ட நாள் என்பதுபட நின்றது. புன்மை - துன்பம். கால - காற்று. சீவகன் ஆகுலம் பெரிதாதல் தோன்ற உவமையாக எடுத்துவிதந்தார். என்னை? உவமை உயர்ந்ததன் மேற்றாகலின் என்க. ஆகுலம் - துன்பம். 
 | 
 ( 31 ) | 
|  2630 | 
அழுதுபின் னணிநகர் செல்ல வாயிரந் |   |  
|   | 
தொழுதகு சிவிகைகள் சூழப் போயபி |   |  
|   | 
னிழுதமை யெரிசுடர் விளக்கிட் டன்னவள் |   |  
|   | 
பழுதில்சீர்ப் பம்மைதன் பள்ளி நண்ணினாள். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அணிநகர் அழுது பின்செல்ல - இராசமாபுரம் அழுதவாறு பின்னே செல்ல; தொழுதகு சிவிகைகள் ஆயிரம் சூழப்போயபின் - வணங்கத்தக்க பல்லக்குகள் ஆயிரம் சூழ்ந்து வரச் சென்ற பிறகு; இழுது அமை எரிசுடர் விளக்கிட்ட அன்னவள் - நெய் பொருந்திய சுடரை விளக்கிட்டாற் போன்றவளாகிய; பழுதுஇல் சீர்ப்பம்மைதன் - குற்றம் அற்ற புகழையுடைய பம்மை யென்பாளின்; பள்ளி நண்ணினாள் - தவச் சாலையை விசயை அடைந்தாள், 
 | 
| 
    (வி - ம்.) பிறப்பாகிய இருளைப்போக்கி வீடாகிய ஒளியைப் பரப்புதற்கு உரியள் என்பார், ‘விளக்கிட் டன்னவள்‘ என்றார். 
 | 
| 
    ஆயிரஞ் சிவிகையிற் போய மகளிரும் துறப்பதற்கு ஒருப்பட்டுப் போயினர் என்றுணர்க. 
 | 
 ( 32 ) | 
|  2631 | 
அருந்தவக் கொடிக்குழாஞ் சூழ வல்லிபோ |   |  
|   | 
லிருந்தறம் பகர்வுழி யிழிந்து கைதொழு |   |  
|   | 
தொருங்கெமை யுயக்கொண்மி னடிக ளென்றனள் |   |  
|   | 
கருங்கய னெடுந்தடங் கண்ணி யென்பவே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அருந்தவக் கொடிக்குழாம் சூழ - அரிய தவவொழுங்குடைய மகளிர் திரளாகிய புறவிதழ் சூழ்ந்திருப்ப; அல்லிபோல் இருந்து அறம் பகர்வுழி - பம்மை யென்பாள் அவர்களின் நடுவே அகவிதழ்போல அமர்ந்து அறங்கூறியவாறிருக்கும் இடத்தே; கருங்கயல் நெடுந்தடங்கண்ணி - கரிய கயலைப்போன்ற பெருங்கண்ணியாகிய விசயை; இழிந்து - பல்லக்கிலிருந்து இறங்கிச் சென்று; கை தொழுது - கைகளாலே தொழுது; அடிகள்! - அடிகளே!; எமை ஒருங்கு உயக்கொண்மின் என்றனள் - எம்மையெல்லாம் சேரப் பிறவிக்கடலினின்றும் கரையேற்றுவீராக என்றாள். 
 | 
| 
    (வி - ம்.) முன்பு கயல்போலும் கண் என்க. 
 |