|  முத்தி இலம்பகம் | 
 1489  | 
 | 
  | 
| 
    கொடி - ஒழுங்கு. அல்லி - அகவிதழ். பம்மையை அகவிதழ் என்றதற்கேற்ப மகளிர் குழாமாகிய புறவிதழ்கள் என்க. பகர்வுழி - கூறுமிடத்து. கண்ணி இழிந்து தொழுது உயக்கொண்மின் என்றனள், என்க. 
 | 
 ( 33 ) | 
|  2632 | 
ஆரழன் முளரி யன்ன வருந்தவ மரிது தானஞ் |   |  
|   | 
சீர்கெழு நிலத்து வித்திச் சீலநீர் கொடுப்பிற் றீந்தேன் |   |  
|   | 
பார்கெழு நிலத்து ணாறிப் பல்புக ழீன்று பின்னாற் |   |  
|   | 
றார்கெழு தேவரின்பந் தையலாய் விளைக்கு மென்றாள். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) முளரி ஆர் அழல் அன்ன - விறகிலே பொருந்திய அழலைப்போன்ற; அருந்தவம் அரிது - அரிய தவம் நினக்கு மேற்கோடல் அரிது; சீர்கெழு நிலத்துத்தானம் வித்தி - (ஆகையால்) சிறப்புடைய நிலத்தே தானமாகிய விதையை வித்தி; சீல நீர் கொடுப்பின் - (அது முளைக்க) ஒழுக்கமாகிய நீரை அதற்குப் பாய்ச்சின்; பார்கெழு தீந்தேன் நிலத்துள் நாறி - உலகிற் பொருந்திய இன்ப நிலமாகிய உத்தர கருவிலே முளைத்து; பல் புகழ் ஈன்று - பல புகழையும் நல்கி; பின்னால் - பின்னர்; தார்கெழு தேவர் இன்பம் - மாலையணிந்த வானவர் இன்பத்தை; தையலாய்! விளைக்கும் என்றாள் - அரிவையே! விளைவித்துத் தரும் என்றாள். 
 | 
| 
    (வி - ம்.) தானப்பயனாற் போகபூமியிலே பிறந்து, ஆண்டுள்ள நுகர்ச்சியை எய்திப் பின் துறக்கம் பெறுவார் என்றாள். 
 | 
| 
    முளரி ஆர் அழல் அன்ன என மாறுக. முளரி - விறகு. வித்தி - விதைத்து. தானமாகிய வித்தினை வித்தி என்க. ஐம்பொறியும் வென்று அவாவற்ற இடத்தே என்பார் சீர்கெழு நிலத்து என்றார். பார்கெழுநிலம் என்றது உத்தரகுருவினை; (போகபூமியை.) 
 | 
 ( 34 ) | 
|  2633 | 
அறவுரை பின்னைக்கேட்டு மடிகண்மற் றெமக்குவல்லே |   |  
|   | 
துறவுதந் தருளு கென்னத் தூநக ரிழைத்து மேலா |   |  
|   | 
னறவிரி தாம நாற்றி வானகம் விதானித் தாய்ந்து |   |  
|   | 
திறவிதிற் றவிசு தூபந் திருச்சுடர் விளக்கிட் டாரே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அடிகள்! - அடிகளே!; பின்னை அறவுரைக் கேட்டும் - அறவுரையைப் பிறகு கேட்கின்றோம் ; மற்று எமக்கு வல்லே துறவு தந்து அருளுக என்ன - இனி, எமக்கு விரைந்து துறத்தலைத் தந்தருள்க என்று வேண்ட; தூ நகர் இழைத்து - (ஆண்டுள்ள தவமகளிர்) தூய இடத்தை ஒப்பனை செய்து; மேலால் நறவு விரி தாமம் நாற்றி - மேலே மணம் பரப்பும் மலர் மாலைகளைத் தொங்கவிட்டு; வானகம் விதானித்து - வானத்தை மேலே மேற்கட்டியால் மறைத்து; ஆய்ந்து - ஆராய்ந்து; 
 |