| முத்தி இலம்பகம் |
1491 |
|
|
| 2636 |
முன்னுபு கீழ்த்திசை நோக்கி மொய்ம்மலர் | |
| |
நன்னிறத் தவிசின்மே லிருந்த நங்கைமா | |
| |
ரின்மயி ருகுக்கிய விருந்த தோகைய | |
| |
பன்மயிற் குழாமொத்தார் பாவை மார்களே. | |
| |
|
|
(இ - ள்.) மொய்ம்மலர் நன்னிறத் தவிசின்மேல் - மிகுதியான மலர்களையிட்ட நல்ல நிறமுடைய இருக்கையின்மேல்; கீழ்த்திசை முன்னுபு நோக்கி - கீழ்த்திசையை நினைத்து நோக்கி; இருந்த நங்கைமார் பாவைமார்கள் - இருந்த தாயரிருவரை உள்ளிட்ட பாவைபோன்ற மங்கையரெல்லோரும்; இன்மயிர் உகுக்கிய இருந்த தோகைய பன்மயில் குழாம் ஒத்தார் - இனிய மயிரைச் சிந்துதற்கு இருந்த தோகை யுடையனவாகிய பல மயில்களின் திரளைப் போன்றனர்.
|
|
|
(வி - ம்.) நோக்கி முன்னுபு என மாறுக. முன்னுபு - நினைத்து. தோகையென்பது தோன்ற இன்மயிர் என்றார். உகுக்கிய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினை யெச்சம். தோகைய - தோகையையுடையனவாகிய.
|
( 38 ) |
| 2637 |
மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுத | |
| |
லணியிருங் கூந்தலை யௌவை மார்கடாம் | |
| |
பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்னநூற் | |
| |
றுணிபொருள் சிந்தியாத் துறத்தன் மேயினார். | |
| |
|
|
(இ - ள்.) பரமன் சொன்ன நூல் துணிபொருள் சிந்தியா - இறைவன் கூறிய நூல்களின் மெய்ப்பொருளைச் சிந்தித்து; துறத்தல் மேயினார் - துறவை விரும்பியவர்கள்; மணி இயல் சீப்பு இடச் சிவக்கும் வாள் நுதல் - மணிகள் இழைத்த சீப்பினை இட்டாற் சிவக்கும் ஒளி பொருந்திய நுதலைச் சார்ந்துள்ள; அணி இருங் கூந்தலை - அழகிய கரிய கூந்தலை; ஓளவைமார்கள் தாம் - ஆரியாங்கனைகள்; பணிவு இலர் பறித்தனர் - ஒன்றில் தாழ்விலராய்ப் பறித்தனர்.
|
|
|
(வி - ம்.) மணியியல் சீப்பு - மணிகளாலியற்றப்பட்ட சீப்பு. ஒளவைமார் - தவமகளிர். பணிவு - தாழ்வு. பரமன் - அருகக்கடவுள். துணிபொருள் : வினைத்தொகை. சிந்தியா - சிந்தித்து. மேயினார் பறித்தனர் என்க.
|
( 39 ) |
| 2638 |
கன்னிய ராயிரர் காய்பொற் கொம்பனார் | |
| |
பொன்னியற் படலிகை யேந்திப் பொன்மயிர் | |
| |
நன்னிலம் படாமையே யடக்கி நங்கைமார் | |
| |
தொன்மயி ருகுத்தநன் மயிலிற் றோன்றினார். | |
| |
|