பக்கம் எண் :

                       
முத்தி இலம்பகம் 1493 

வைத்த மனமுடையவராய் : திகழ்ந்து எரி விளக்கு எனத்திலகமாயினார் - (மயக்கமின்மையின்) விளங்கி எரியும் விளக்குப் போலத் திலகமாயினர்.

 

   (வி - ம்.) புகழ்ந்துரைக்கும் உரையினால் உண்டாகும் மகிழ்ச்சியும், இகழ்ந்துரைக்கும் உரைக்கு இரங்கும் இரக்கமும் என்க. எனவே விருப்பும் வெறுப்பு மிலராய் என்றாராயிற்று.

( 42 )

வேறு

 
2641 அலைமணிக் கவரி மான்றே ரடுகளி யானை பாய்மா
நிலநெளி கடலந் தானை நிரந்துபூச் சுமப்ப மன்னன்
சிலமலர் தானு மேந்திச் சென்றுசீர் பெருக வாழ்த்தி
யிலமலர்ப் பஞ்சிப் பாதத் தெழின்முடி தீட்டி னானே.

   (இ - ள்.) அலைமணிக் கவரி மான் தேர் - அசைகின்ற மணிக்கவரியையும் குதிரையையும் உடைய தேரும்; அடு களி யானை - கொல்லும் மதயானையும்; பாய்மா - குதிரையும்; நிலம் நெளி கடல் அம் தானை - நிலம் நெளியும் கடலைப்போன்ற காலாட் படையும்; நிரந்து பூச் சுமப்ப - பரவி மலரைச் சுமந்து வர; மன்னன் தானும் சில மலர் ஏந்திச் சென்று - சீவக வேந்தன் தானும் சில மலர்களை ஏந்திச்சென்று; சீர் பெருக வாழ்த்தி - புகழ் வளர வாழ்த்தி; இலமலர்ப் பஞ்சிப் பாதத்து - இலவமலர் போலும் செம்பஞ்சூட்டிய அடிகளிலே; எழில் முடி தீட்டினான்- தன் அழகிய முடியைச் சூட்டினான்.

 

   (வி - ம்.) அலைகவரி, மணிக்கவரி என இயைக்க. மான் - குதிரை. நிலம் நெளிதற்குக் காரணமான தானை, கடல்போலும் தானை, அந்தானை எனத் தனித்தனி கூட்டுக. நிரந்து - பரவி. மன்னன் : சீவகன். இலமலர் - இலவமலர். தீட்டினான் - சேர்த்தான்.

( 43 )
2642 கடியவை முன்பு செய்தேன்
  கண்ணினாற் காணச் சின்னா
லடிகளிந் நகரி னுள்ளே
  யுறைகென வண்ணல் கூற
முடிகெழு மன்னற் கொன்று
  மறுமொழி கொடாது தேவி
படிமம்போன் றிருப்ப நோக்கிப்
  பம்மைதான் சொல்லி னாளே.

   (இ - ள்.) முன்பு கடியவை செய்தேன் - முன்பு (நும்மைக் காணற்கியலாதவாறு) தீவினைகளைச் செய்த நான்; கண்ணினால் காண - கண்களாற் கண்டு மகிழ்ந்திருக்கும்படி; அடிகள் சின்னாள்