முத்தி இலம்பகம் |
1496 |
|
|
2646 |
அடிகளோ துறக்க வொன்று | |
|
முற்றவர் யாது மல்லர் | |
|
சுடுதுய ரென்கட் செய்தாய் | |
|
சுநந்தைநீ யௌவை யல்லை | |
|
கொடியைநீ கொடியை செய்தாய் | |
|
கொடியையோ கொடியை யென்னா | |
|
விடருற்றோர் சிங்கந் தாய்மு | |
|
னிருந்தழு கின்ற தொத்தான். | |
|
(இ - ள்.) அடிகளோ துறக்க - அடிகளோ துறவு பூண்க; ஒன்றும் யாதும் உற்றவர் அல்லர் - (ஏனெனில்) அவர் என்னிடம் ஒன்றும் இன்பமாதல் துன்பமாதல் யாதொன்றும் உற்றவர் அல்லர்; சுநந்தை! நீ ஒளவை - சுநந்தையே! நீயே என் அன்னை; கொடியை அல்லை - (இதற்குமுன்) நீ எவ்வகையினும் கொடியை அல்லை; என் கண் சுடுதுயர் செய்தாய் - (இப்போது துறந்தனை யாதலின்) இப்போது என்னிடம் சுடுதுயரைச் செய்தனை யாதலின்; கொடியை செய்தாய் - கொடியவற்றைச் செய்தனை; கொடியை கொடியை என்னா - கொடியை கொடியை என்று; ஓர் சிங்கம் இடர் உற்று - ஒரு சிங்கம் துன்புற்று; தாய்முன் இருந்து அழுகின்றது ஒத்தான் - தன் தாயின்முன் அமர்ந்து அழுவது போன்றான்.
|
|
(வி - ம்.) அடிகளோ என்புழி ஓகாரம் பிரிநிலை. யாது ஒன்றும் உற்றவர் அல்லர் என இயைக்க. துன்பமாதல் இன்பமாதல் யாதொன்றும் உற்றவர் அல்லர் என்றவாறு. ஒளவையல்லை என்புழி எடுத்தோதி வினாவாக்கினும் அமையும்.
|
( 48 ) |
2647 |
சென்றதோ செல்க விப்பாற் | |
|
றிருமக ளனைய நங்கை | |
|
யின்றிவ டுறப்ப யானின் | |
|
னரசுவந் திருப்பே னாயி | |
|
னென்றெனக் கொழியு மம்மா | |
|
பழியென விளங்கு செம்பொற் | |
|
குன்றனான் குளிர்ப்பக் கூறிக் | |
|
கோயில்புக் கருளு கென்றாள். | |
|
(இ - ள்.) சென்றதோ செல்க - போனது போக; இப்பால் - இனி; திருமகள் அனைய நங்கை இவள் துறப்ப - திருமகளைப் போன்ற நங்கையாகிய இவள் துறக்கவும்; இன்று யான் நின் அரசு உவந்து இருப்பேன் ஆயின் - இப்போது நான் உன் அரசை
|
|