பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1504 

கண் பிறழும்படி ஒதுங்கி : வெண்ணெயின் குழைந்து நிற்பார் ஆயினார் - வெண்ணெய்போலக் குழைந்து நிற்பார் ஆயினார்.

   (வி - ம்.) வேற்கணார் சோர்வாரும் இரந்து நிற்பாரும் குழைந்து நிற்பாரும் ஆயினார் என்க. கண்ணி - தலையிற் சூடுமாலை. சுண்ணம் - நறுமணப்பொடி. தொழுதனர் : முற்றெச்சம்.

( 61 )
2660 கூந்தலை யொருகை யேந்திக்
  குங்குமத் தாரை பாயப்
பூந்துகி லொருகை யேந்திப்
  புகுமிடங் காண்டல் செல்லார்
வேந்தனைச் சரணென் றெய்த
  விம்முறு துயர நோக்கிக்
காய்ந்துபொற் சிவிறி யேந்திக்
  கார்மழை பொழிவ தொத்தான்.

   (இ - ள்.) குங்குமத் தாரை பாய - தத்தையின் சிவிறி யால் குங்கும நீர்த் தாரை பாய்வதால்; கூந்தலை ஒருகை ஏந்திப் பூந்துகில் ஒருகை ஏந்தி - கூந்தலை ஒரு கையில் ஏந்தி, அழகிய துகிலை மற்றொரு கையில் ஏந்தி; புகும் இடம் காண்டல் செல்லார் - புகுமிடம் அறியாராய்; வேந்தனைச் சரண் என்று எய்த - அரசனை அடைக்கலம் என்று அடைய; விம்முறு துயரம் நோக்கி - அவர்களுடைய விம்மல் கொண்ட துயரத்தைப் பார்த்து; காய்ந்து - சினந்து; பொன் சிவிறி ஏந்தி - பொன் சிவிறியைக்கொண்டு; கார் மழை பொழிவது ஒத்தான் - முகில் மழைபெய்வது போன்றான்.

   (வி - ம்.) தாரைபாயக் கூந்தலை ஒருகை யேந்தித் துகில் ஒருகையேந்தி என இயைக்க. தத்தை விட்ட குங்குமத்தாரை என்க. காண்டல் செல்லார் : ஒரு சொன்னீர்மைத்து. சரண் - அடைக்கலம்.

( 62 )
2661 வீக்கினான் றாரை வெய்தாச்
  சந்தனத் தளிர்நன் மாலை
யோக்கினார் கண்ணி சுண்ண
  முடற்றினா ருருவச் சாந்திற்
பூக்கமழ் துகிலுந் தோடு
  மாலையுஞ் சொரியப் போர்தோற்
றாக்கிய வநங்கன் சேனை
  யாறலா றாயிற் றன்றே.

   (இ - ள்.) சந்தனத் தளிர் நன்மாலை ஓக்கினார் - (அப்போது தத்தை சார்பினர்) சந்தனத் தளிரால் ஆகிய அழகிய மாலையால்