பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1505 

அடித்தனர்; கண்ணி சுண்ணம் உருவச் சாந்தின் உடற்றினார் - கண்ணியாலும் சுண்ணதாலும் அழகிய சுண்ணப் பொடியாலும் எறிந்து அவனை வருத்தினார்; தாரை வெய்துஆ வீக்கினான் - (சீவகனும்) நீர்த் தாரையைச் சிவிறியாற் கடிதாக முறுக்கினான்; ஆக்கிய அநங்கன் சேனை - (அப்போது அப்போரை) உண்டாக்கிய காமன் சேனை; போர் தோற்று - போரிலே தோல்வி அடைந்து; பூக் கமழ்துகிலும் தோடும் சுண்ணமும் சொரிய - மலர் மணங்கமழும் ஆடையும் தோடும் சுண்ணப் பொடியும் சிதற; ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே - (கெட்டு) வழியல்லா வழிகளிலே சென்றது.

   (வி - ம்.) மகளிரெல்லாம் காமன் படையாதலின், தத்தை சேனையையும் 'அநங்கன் சேனை' என்றார்.

( 63 )
2662 அன்னங்க ளாகி யம்பூந்
  தாமரை யல்லி மேய்வார்
பொன்மயி லாகிக் கூந்தல்
  போர்த்தனர் குனிந்து நிற்பா
ரின்மலர்க் கமல மாகிப்
  பூமுகம் பொருந்த வைப்பார்
மின்னுமே கலையுந் தோடுங்
  கொடுத்தடி தொழுது நிற்பார்.

   (இ - ள்.) அன்னங்களாகி அம்பூந் தாமரை அல்லி மேய்வார் - அன்னங்களைப்போல அழகிய தாமரை மலரையும் அல்லியையும் மேய்வார்கள்; பொன் மயில் ஆகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார் - அழகிய மயில் போலக் கூந்தலாற் போர்த்துக் கொண்டு தலை வணங்கி நிற்பார்கள்; இன்மலர்க் கமலம் ஆகிப் பூமுகம் பொருந்த வைப்பார் - இனிய தாமரை மலர்போலத் தம் முகத்தைப் பூவுடன் பொருந்த வைப்பார்கள்; மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடிதொழுது நிற்பார் - ஒளிரும் மேகலையையும் தோட்டையுங் கொடுத்து அடியைத் தொழுது நிற்பார்கள்.

   (வி - ம்.) தோற்றவர் புல்லைக் கவ்வுதலுண்மையின் அல்லிமேய்வார் என்றார். மேகலையும் தோடும் திறையாக் கொடுத்து என்றவாறு.

( 64 )
2663 பண்ணுரை மகளிர் மாலை
  பைந்துகில் கவர்ந்து கொள்ளக்
கண்ணுரை மகளிர் சோர்ந்து
  காரிருட் டிவளு மின்போற்