பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1513 

   (இ - ள்.) ஏந்திய அழல்நிறத் தேறல் - (தனக்குக் கொடுக்க) ஏந்திய அழல் நிறமுடைய தேறலை; குழை முகம் இடவயின் கோட்டி - (குணமாலை) குழையணிந்த முகத்தை இடத்தே வளைத்துப் (பார்த்து); உள்மதி கண்டு - அதனுள்ளே தன்முகமாகிய திங்கள் தோன்றக்கண்டு அதனைத் திங்களாகவே கருதி; நிழல் முகப் பகைகெட - ஒளியுறும் தன் முகத்திற்குப் பகையாகிய அத் திங்கள் கெடும்படி; ஐ எனப் பருகி - விரைந்து பருகி; நீள் விசும்பு உழல் எனா - நீண்ட வானிலே உழல்வாயாக என்று கூறி; நோக்குவாள் மதிகண்டு ஊடினாள் - வானை நோக்குகின்றவள் மதியைக் கண்டு ஊடினாள்.

( 79 )
2678 பருகினேற் கொளித்துநீ பசலை நோயொடு
முருகிப்போ யின்னுமற் றுளையென் றுள்சுடக்
குருதிகண் கொளக்குண மாலை யூடினா
ளுருவத்தா லுறத்தழீஇ யுடற்றி நீக்குவான்

   (இ - ள்.) பருகினேற்கு - விரையப் பருகிய எனக்கு; நீ பசலை நோயொடும் உருகி ஒளித்துப்போய் - நீ பசலை நோயுடன் உருகிப் பின்னர் ஒளித்துச் சென்று; இன்னும் உளை என்று - இன்னும் இருக்கின்றனை என்று; உள்சுட - மனம் வெதும்ப; கண் குருதிகொள் - கண்சிவப்ப; குணமலை ஊடினாள் - குணமாலை ஊடினாள்; உருவத் தார் உறத் தழீஇ உடற்றி நீக்குவான் - அழகிய தார் பொருந்த வருத்தத் தழுவி நீக்குகின்ற மன்னன். 

   (வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.

   தேறல் உண்டதனாற் சிவந்த கண்கள் மதியோடூடிச் சிவந்தன என்றார்.

   ”பருகி......உளை” குணமாலை திங்களை நோக்கிக் கூறியது. இன்னும் உளை என்றது இறந்துபட்டாயல்லை என்று சினந்தபடியாம். கண் குருதிகொள என மாறுக. நீக்குவான் : சீவகன்; வினையாலனையும் பெயா.்

( 80 )
2679 நங்கைநின் முகவொளி யெறிப்ப நன்மதி
யங்கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது
மங்கைநின் மனத்தினால் வருந்த லென்றவள்
பொங்கிள வனமுலை பொருந்தி னானரோ.

   (இ - ள்.) நங்கை! - நங்காய்!; நின்முக ஒளி அங்கு எறிப்ப - நின் முகத்தின் ஒளி அங்குச் சென்று வீசியதனால்; நிழல் மதி அதோ உள் கறுத்து அழகின் தேய்ந்தது - ஒளியையுடைய திங்கள் அதோ உள்ளே கறுத்து அழகினின்றும் நீங்கித்