| முத்தி இலம்பகம் | 
1515  | 
 | 
  | 
|  2682 | 
அளிந்த தீம்பழ மிஞ்சி யார்ந்தநீர் |   |  
|   | 
விளைந்த வல்விளை வரிசி வேரியும் |   |  
|   | 
வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பக |   |  
|   | 
முளைந்து மல்லிகை யொலியல் சூடினார். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அளிந்த தீம்பழம் நீர் ஆர்ந்த இஞ்சி - அளிந்த இனிய எலுமிச்சம்பழ நீரிலே பொருந்திய செவ்விஞ்சியும்; அரிசி விளைந்த வல்விளைவு - அரிசி வலிய விளைவாக விளைந்த பொரி அவல் முதலியனவும்; வேரியும் .- மதுவும்; வளைந்த மின் அனார் மகிழ்ந்து - வளைந்த மின்னுக் கொடிபோன்றவர் மகிழ்ந்து (நுகர்ந்து); சண்பகம் உளைந்து - சிறு சண்பகத்தை வெறுத்து; ஒலியல் சூடினார் - மல்லிகை மாலையைச் சூடினார். 
 | 
| 
    (வி - ம்.) அரிசி வலிய விளைவாக விளைந்தவை பொரி, அவல் முதலியன. கருப்புக் கட்டி முதலிய பரலவுங் கூட்டி முறுகப் பொரித்தலின், வலிய விளைவாயிற்று. 
 | 
| 
    இனி, பழமும் இஞ்சியும் நீரிலே நின்று விளைந்த வலிய விளைதலையுடைய அல்லி யரிசியென்றும் உரைப்ப 
 | 
( 84 ) | 
|  2683 | 
தொத்து டைம்மலர்த் தொங்கல் கண்பொர |   |  
|   | 
முத்து டைம்முலைக் கண்க ணொந்தவென் |   |  
|   | 
றெய்த்த டிச்சிலம் பிரங்கு மின்குரல் |   |  
|   | 
கைத்தெ டுத்தலிற் காமந் தாழ்ந்ததே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தொத்து உடை மலர்த் தொங்கள் கண்பொர - கொத்தாக உள்ள மலர் மாலை முலைக்கண்களைத் தாக்கலால்; முத்து உடை முலைக்கண்கள் நொந்த என்று - முத்துக்களையுடைய அம் முலைக்கண்கள் நொந்தன என்று (முன்னர்க்) கூறி; அடிச் சிலம்பு எய்த்து இரங்கும் இன்குரல் - அடியிலுள்ள சிலம்புகள் இளைத்து ஒலிக்கும் இனிய குரலை; கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்தது - செலுத்தி எழுப்புதலாலே காம இன்பம் அக் காலத்தே தங்கியது. 
 | 
| 
    (வி - ம்.) தொத்து - கொத்து. உடைம்மலர் எனவும் உடைம்முலை எனவும் ஈரிடத்தும், மகரம் வண்ணத்தால் விரிந்தது. தொங்கல் - மாலை. எய்த்து - இளைத்து. கைத்து - செலுத்தி. 
 | 
( 85 ) | 
|  2684 | 
பொன்ப னிப்புறும் பொற்பி னார்நல |   |  
|   | 
மன்ப னித்தலை யணங்க வத்தலை |   |  
|   | 
முன்ப னித்தலை முழுது நீங்கிப்போய்ப் |   |  
|   | 
பின்ப னித்தலை பேண வந்ததே. |   |  
|   | 
 
 
 |