| முத்தி இலம்பகம் | 
1517  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'என்னருப்பு மில்லவர்' என்று பாடம் ஓதி, 'எக்குற்றமும் இல்லாதவர்' என்றும் உரைப்பர். 
 | 
| 
    நெருப்பைத் தின்னும் இயல்புடைய எலியுண்மையும் அதன்மயிரால் அழகிய கம்பலம் செய்யப்பட்டன என்பதும் அக் கம்பலம் மிக்க வெம்மையைத் தருவனவென்பதும் இதனால் உணர்க. 
 | 
( 88 ) | 
|  2687 | 
ஆட லின்சுவை யமர்ந்து நாடொறும் |   |  
|   | 
பாடன் மெய்ந்நிறீப் பருகிப் பண்சுவைத் |   |  
|   | 
தோடு மாமதி யுரிஞ்சு மொண்பொனின் |   |  
|   | 
மாடக் கீழ்நிலை மகிழ்ந்து வைகினார். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நாடொறும் ஆடல் இன்சுவை அமர்ந்தும் - நாள்தோறும் கூத்தின் இனிய சுவையை நுகர்ந்தும்; பாடல் மெய்ந்நிறீஇப் பருகிப் பண்சுவைத்து - இசையை உண்மையாக நிறுத்தி அப் பண்ணைச் சுவைத்தும்; ஓடும் மாமதி உரிஞ்சும் ஒண்பொனின் மாடக்கீழ்நிலை - வானிற் செல்லும் பெருமதியை உரிஞ்சும் சிறந்த பொன்னாலான மாடத்தின் கீழ்நிலத்திலே; மகிழ்ந்து வைகினார் - களித்துத் தங்கினார். 
 | 
| 
    (வி - ம்.) அமர்ந்து - விரும்பி. நிறீஇ - நிறுத்தி. ஓடும் - இயங்கா நின்ற. மாடக்கு - மாடத்திற்கு. 
 | 
( 89 ) | 
வேறு
 | 
|  2688 | 
புரிக்குழன் மடந்தையர் பொம்மல் வெம்முலை |   |  
|   | 
திருக்கழற் குருசிறார் திளைக்கும் போரினுட் |   |  
|   | 
செருக்குரற் சிறுபறை சிலம்பு கிண்கிணி |   |  
|   | 
யரிப்பறை மேகலை யாகி யார்த்தவே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) புரிக்குழல். மடந்தையர் பொம்மல் வெம்முலை - நெளிவினையுடைய குழலாராம் மங்கையரின் பருத்த வெம்முலைகளும்; திருக்கழல் குருசில்தார் - அழகிய கழலணிந்த குரிசிலின் தாரும்; திளைக்கும் போரினுள் - பொருகின்ற போரிலே; செருக்குரல் சிறுபறை - போர்க்குரலையுடைய சிறுபறைகளாக; சிலம்பு கிண்கிணி - சிலம்பும் கிண்கிணியும் ஆகியும்; அரிப்பறை மேகலை ஆகி - அரிப் பறையாக மேகலை ஆகியும்; ஆர்த்த - ஆர்த்தன. 
 | 
| 
    (வி - ம்.) மடந்தையர் - ஈண்டுச் சீவகன் மனைவிமார். பொம்மல் - பெருமை. வெம்முலை - வெம்மையுடைய முலை; விரும்புதற்குக் காரணமான முலையுமாம். குருசில் : சீவகன். செரு - போர். போரையுண்டாக்கும் குரல் என்க. சிலும்பும் கிண்கிணியும் சிறுபறையாகி மேகலை அரிப்பறையாகி ஆர்த்த என்க. 
 | 
( 90 ) |