| முத்தி இலம்பகம் | 
1539  | 
 | 
  | 
| 
    சீவகன். வருக்கை - பலாமரம். ஆங்கு ஓர் கடுவனைக் கண்டனன்; அக்கடுவன் மந்தியை விளித்தது என்க. 
 | 
( 122 ) | 
|  2721 | 
அளித்திள மந்தி தன்னை |   |  
|   | 
  யார்வத்தால் விடாது புல்லி |   |  
|   | 
யொளித்தொரு பொதும்பர்ச் சோ்ந்தாங் |   |  
|   | 
  கொருசிறை மகிழ்ச்சி யார்ந்து |   |  
|   | 
தளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித் |   |  
|   | 
  தம்மின மிரண்டுஞ் சோ்ந்த |   |  
|   | 
களித்தலைக் கூட்டங் காதன் |   |  
|   | 
  மந்திகண் டிருந்த தன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஒரு பொதும்பர்ச் சேர்ந்து ஆங்கு ஒரு சிறை ஒளித்து - (அக்கடுவன்) ஒரு பொதும்பரை அடைந்து அதன் ஒரு பக்கத்திலே மறைவாக இருந்து; இள மந்தி தன்னை அளித்து ஆர்வத்தால் விடாது புல்லி - இளமந்தியை அதரித்து ஆவலுடன் விடாது தழுவி; மகிழ்ச்சி ஆர்ந்து - இன்பம் நிறைந்தபின்; தளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித் தம் இனம் இரண்டும் சேர்ந்த - தளிர் நிறைந்த அப் பொதும்பரை விட்டுத் தம் இனத்தை இரண்டும் அடர்ந்தன; களித்தலைக் கூட்டம் - களிப்புடைய அக் கூட்டத்தை; காதல் மந்தி கண்டிருந்தது - அக் கடுவனிடம் காதலையுடைய மந்தி கண்டிருந்தது. 
 | 
| 
    (வி - ம்.) ஒளித்து மறைவாகப் போய் என்க. பொதும்பர் - மரச்செறிவு. ஒருசிறை - ஒரு பக்கத்தே. இரண்டும் - அக்கடுவனும், மந்தியும். 
 | 
( 123 ) | 
|  2722 | 
பரத்தையர்த் தோய்ந்த மார்பம் |   |  
|   | 
  பத்தினி மகளிர் தீண்டார் |   |  
|   | 
திருத்தகைத் தன்று தெண்ணீ |   |  
|   | 
  ராடிநீர் வம்மி னென்ன |   |  
|   | 
வுரைத்ததென் மனத்தி லில்லை |   |  
|   | 
  யுயர்வரைத் தேனை யுண்பார் |   |  
|   | 
வருத்துங்காஞ் சிரமும் வேம்பும் |   |  
|   | 
  வாய்க்கொள்வார் யாவர் சொல்லாய். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பரத்தையர் தோய்ந்த மார்பம் திருத்தகைத்து அன்று - பரத்தையரைத் தழுவிய மார்பு தூய தன்மையது அன்று; பத்தினி மகளிர் தீண்டார் - (ஆகையால்) கற்புடைய மங்கையர் தீண்டமாட்டார்; நீர் தௌ நீர் ஆடி வம்மின் என்ன - நீர் தெளிந்த நீரிலே முழுகி வருவீர் என்று (அம்மந்தி) 
 |