| முத்தி இலம்பகம் |
1540 |
|
|
|
கூற; (அது கேட்ட கடுவன்), உரைத்தது என் மனத்தில் இல்லை - நீ கூறியதை யான் மனத்தும் நினைத்தது இல்லை; உயர் வரைத் தேனை உண்பார் யாவர் வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய்க்கொள்வார்? - உயர்ந்த மலைத்தேனைப் பருகுவோர் யாவர் கசப்பைத் தரும் எட்டியையும் வேம்பையும் வாய்க்கொள்வார்?; சொல்லாய் - நீயேகூறுவாய்.
|
|
(வி - ம்.) மார்பம் திருத்தகைத்து அன்று ஆதலால் பத்தினி மகளிர் தீண்டார் என்க. திருத்தகைத்து - தூய தன்மைத்து. ஈண்டுத் திரு தூய்மைமேனின்றது. நீர் நீராடிவம்மின் என மாறுக. நீர் - நீவிர். மலைத்தேன் - தன் காதன் மந்திக்குவமை. காஞ்சிரமும் வேம்பும் பரத்தைமையுடைய பிற மந்திகட்குவமை. காஞ்சிரம் - எட்டிக்காய்; ஆகுபெயர். வேம்பு - காய்க்கு ஆகுபெயர்.
|
( 124 ) |
| 2723 |
ஈங்கினி யென்னை நோக்கி | |
| |
யெவன் செய்தி யெனக்கு வாணா | |
| |
ணீங்கிற்றுச் சிறிது நிற்பிற் | |
| |
காண்டியா னீயு மென்னத் | |
| |
தூங்கித்தான் றுளங்க மந்தி | |
| |
தொழுத்தையேன் செய்த தென்று | |
| |
தாங்குபு தழுவிக் கொண்டு | |
| |
தன்னைத்தான் பழித்த தன்றே. | |
|
|
(இ - ள்.) ஈங்கு இனி என்னை நோக்கி எவன் செய்தி - இவ்விடத்தே (மறுமொழி கூறாமல்) இனி வெறுப்புடன் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய்?; சிறிது நிற்பின் எனக்கு வாணாள் நீங்கிற்று - சிறிது தாழ்ப்பின் எனக்கு வாழ்நாள் நீங்கியதாம்; நீயும் காண்டியென்னத் தான் தூங்கித் துளங்க - அதனை நீயும் காண்பாயாக என்று அக்கடுவன் தூங்கி (அம்மந்தியின் மனம்) வருந்தச் செய்ய; மந்தி தொழுத்தையேன் செய்தது என்று - அம் மந்தியும் இவ்வருத்தம் தொழுத்தையேன் செய்தது என்று கூறி; தாங்குபு தழுவிக்கொண்டு - எடுத்துத் தழுவிக்கொண்டு; தன்னைத் தான் பழித்தது - தன்னைத்தானே பழித்துக் கொண்டது.
|
|
(வி - ம்.) தொழுத்தையேன் - நின் ஏவலைச் செய்யும் அடியேன். தொழுத்தையேன் செய்தது எனவே 'மனங் கொளற்க' என்றும் வேண்டிக்கொண்டதாயிற்று. 'இல்லுள் - தொழுத்தையாற் கூறப்படும்' (நலாடி. 326) என்று 'தொழுத்தை' அடிமையாதல் காண்க.
|
( 125 ) |
| 2724 |
கண்ணினாற் குற்றங் கண்டுங் | |
| |
காதலன் றெளிப்பத் தேறிப் | |
| |
பெண்மையாற் பழித்த மந்தி | |
| |
பெருமகி ழுவகை செய்வான். | |
| |
றிண்ணிலைப் பலவின் றேங்கொள் | |
| |
தொழுத்தையேன் செய்த தென்று | |
| |
பண்ணுறு சுளைகள் கையாற் | |
| |
பகுத்துணக் கொடுத்த தன்றே. | |
|