பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1541 

 

   (இ - ள்.) கண்ணினால் குற்றம் கண்டும் - கண்ணாலே குற்றத்தைப் பார்த்தும்; காதலன் தெளிப்பத் தேறிப் பெண்மை யாற் பழித்த மந்தி - காதலன் ஊடல் தீர்ப்பத் தெளிந்து தன் பெண்மையால் தன்னைப் பழித்துக்கொண்ட மந்தியை; பெருமகிழ் உவகை செய்வான் - பெரிதும் மகிழ்ச்சியூட்ட வேண்டி; திண் நிலைப் பலவின் தென் கொள் பெரும்பழம் கொண்டு - திண்மையுடைய பலவின் இனிமை பொருந்திய பெரிய பழமொன்றை எடுத்து; கீறி - நகத்தாற் பிளந்து; பண் உறு சுளைகள் - ஆராய்தலுற்ற சுளைகளை; கையால் பகுத்து உணக்கொடுத்தது - (கடுவன்) தன் கையினால் எடுத்து உண்ண நல்கியது.

   (வி - ம்.) பெண்மை - ஈண்டுப் பெண்மைக் குணங்கள் நான்கனுள் மடம் ஒன்றனையே குறித்து நீன்றது. தன்னையே பழித்துக்கொண்ட மந்தி எண்க. பண்ணுறுதல் - ஆராய்ந்தெடுக்கப்படுதல்.

( 126 )
2725 இன்கனி கவரு மந்தி கடுவனோ டிரிய வோட்டி
நன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கி
யென்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றா
னன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே.

   (இ - ள்.) இன் கனி கவரும் மந்தி கடுவ னோடு இரிய ஓட்டி - இனிய கனியைக் (கடுவன் நல்க) வாங்கும் மந்தியையும் அக்கடுவனையும் ஓட வெருட்டி; நன் கனி சிலதன் உண்ண - அந்த நல்ல பழத்தை (அத்தோட்டப் ) பணியாளன் உண்ணாநிற்க; நச்சு வேல் மன்னன் நோக்கி - (அதனை) நஞ்சூட்டிய வேலேந்திய மன்னன் பார்த்து; அன்புடை அரிவை கூட்டம் பிறனுழைக் கண்டது ஒத்து - காதலையுடைய மனைவியின் கூட்டத்தைப் பிறனிடங் கண்டதைப்போன்று; என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான் - உடலுடன் தோன்றிச் செறிந்த காமத்தையும் இழிவைத்தரும் முதுமையையும் வெறுத்து நின்றான்.

   (வி - ம்.) சிலதன் : அரசன் ஏவல் செய்து அக் காவினைக் காப்பவன். 'பூ விலை மடந்தையர்' ஏவற்சிலதியர் (சிலப். 5 : 51) எனக் காண்க. என்பு : ஆகுபெயராய் உடம்பை யுணர்த்தியது. ஈண்டுக் காமம் என்றது அரசுரிமை எய்தி நுகரும் போகத்தின் மேலே நிகழும் ஆர்வத்தை. அது 'செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் - றல்லல் நீத்த உவகை நான்கே' (தொல். மெய்ப் - 11) என்பதனாலுணர்க. ஈண்டு