| முத்தி இலம்பகம் |
1543 |
|
|
|
வலியவர் வெளவிக்கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும் - வலியவர் கைப்பற்றிக்கொண்டு பழைய வரம்பைக் கடந்து குறும்பு செய்கின்ற; பிறவியது கலிகண்டாம் - பிறப்பின் கலியைக் கண்டோம்; காலத்தால் அடங்கி நோற்று - துறத்தற் குரிய இக் காலத்தே ஐம்பொறியும் அடங்கித் தவஞ்செய்து; நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் - அழிவு இல்லாத வீட்டினை அடைதல் நன்றே போலும்.
|
|
(வி - ம்.) கலி - நுகரும் பொருளின்மையால் அவற்றின் மேற்செல்லும் பற்றால் நிகழும் வருத்தம்; செருக்குமாம். 'மேலை வரம்பு இகந்து' என்றது தந்தை தாயத்தைப்புதல்வனே பற்றுதற்குரியன் என முன்னர்க் கூறிய வரம்பைக் கடந்து என்றவாறு. என்றது சச்சந்தனரசைச் கட்டியங்காரன் வலிதின் எய்திய தன்மை கூறியவாறாயிற்று.
|
( 129 ) |
| 2728 |
நல்வினை யென்னு நன்பொற் | |
| |
கற்பக மகளி ரென்னும் | |
| |
பல்பழ மணிக்கொம் பீன்று | |
| |
பரிசில்வண் டுண்ணப் பூத்துச் | |
| |
செல்வப்பொற் சிறுவ ரென்னுந் | |
| |
தாமங்க டாழ்ந்து நின்ற | |
| |
தொல்கிப்போம் பாவக் காற்றி | |
| |
னொழிகவிப் புணர்ச்சி யென்றான். | |
|
|
(இ - ள்.) நல்வினை என்னும் நன்பொற் கற்பகம் மணிக்கொம்பு - நல்வினை என்கின்ற அழகிய பொன்மயமான கற்பகத்தின் மணிக்கொம்பு; பரிசில் வண்டு உண்ணப் பூத்து - பரிசிலராகிய வண்டுகள் தேனை நுகரும்படி மலர்ந்து; மகளிர் என்னும் பல்பழம் ஈன்று - மகளிர் என்கின்ற பல கனிகளை யீன்று; செல்வப் பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது - அழகிய செல்வச் சிறுவர் என்கிற மாலைகள் தன்னிடத்தே தங்கி நின்றது; பாவக் காற்றின் ஒல்கிப்போம் - இது தீவினைக் காற்று மோதினால் நிலையாமற் சாய்ந்து விழுந்துபோம்; ஒழிக இப் புணர்ச்சி என்றான் - (அவ்வாறு விழுமுன்) இவ்வில்லறத் தொடர்பு நீங்குக என்றெண்ணினான்.
|
|
(வி - ம்.) நல்வினை நயந்தவெல்லாந் தருதலின் கற்பகம் எனப்பட்டது. பரிசிலராகிய வண்டு என்க. 'பொன்போற் புதல்வர்' என்றார். புறத்தினும் (9). தாமம் - மாலை. சிறுவர்க்குவமை. கற்பகம் நின்றது அது ஒல்கிப்போம் என்க. பாவக்காற்று - தீவினையாகிய காற்று.
|
( 130 ) |
| 2729 |
வேட்கைமை யென்னு நாவிற் | |
| |
காமவெந் தேறன் மாந்தி | |
| |
மாட்சியொன் றானு மின்றி | |
| |
மயங்கினேற் கிருளை நீங்கக் | |
| |
|