பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1546 

சிவந்த வாயிலே முள்ளனைய பற்கள் விளங்க; முறுவல் தூது ஆதி ஆக - முறுவலிக்கும் முறுவல் தூது முதலாக; காமம் அள்ளிக்கொண்டு உண்ணக் கனிவித்தார் - அவன் காமவின்பத்தை வாரி உண்ணும்படி பழுப்பித்துப் பார்த்தார்; பனிவில் தாழ்ந்தவள் இதழ்மாலை மார்பன் - முத்துவடம் தங்கிய, வளவிய மலர் மாலையுடைய மார்பன்; வச்சிர மனத்தன் ஆனான்- (நெகிழாமல்) துறவின்கண்ணே உறுதி பூண்ட உள்ளத்தன் ஆயினான்.

   (வி - ம்.) பனிவில் - முத்துவடம் : (ஆகுபெயர்).

   கோலி - வளைத்து. கண்விலங்கிப் பிறழ என்க. முறுவலாகிய தூது என்க. கனிவித்துப் பார்த்தார் என்க. வச்சிர மனம் - உறுதியுடைய மனம்.

( 134 )
2733 முலைமுகஞ் சுமந்த முத்தத்
  தொத்தொளிர் மாலை யாரு
மலைமுகந் தனைய மார்பின்
  மன்னனு மிருந்த போழ்திற்
கொலைமுகக் களிற னாற்கு
  நாழிகை சென்று கூறக்
கலைமுக மல்லர் புல்லிக்
  கமழுநீ ராட்டி னாரே.

   (இ - ள்.) முலைமுகம் சுமந்த முத்தத் தொத்து ஒளிர் மாலையாரும் - முலைத்தலை சுமந்த முத்துக் கொத்து விளங்கும் மாலையுடைய மகளிரும்; மலை முகந்த அனைய மார்பின் மன்னனும் - மலையின் பெருமையை வாரிக்கொண்டாற் போன்ற மார்பையுடைய வேந்தனும்; இருந்த போழ்தில் - அமர்ந்திருந்த போது; கொலைமுகக் களிறனாற்கு நாழிகை சென்று கூற - கொலைத்தன்மையுடைய களிறு போன்ற சீவகற்குக் கணிகள் சென்று நாழிகை கூற; கலைமுக மல்லர் புல்லிக் கமழுநீர் ஆட்டினார் - நீராட்டுங் கலை தேர்ந்த மல்லர் உடம்பைத் தடவி நறுமணங் கமழும் நீரால் ஆட்டினார்.

   (வி - ம்.) முலைமுகம் என்புழி முகம் ஏழாவதன் சொல்லுருபு. தொத்து - கொத்து. மாலையார் : தேவிமார். மன்னன் : சீவகன். மலையின் பெருமையைக் கொள்ளைகொண்டாற் போலும் மார்பு என்க. கணிகள் சென்று நாழிகை கூற என்க. மஞ்சனமாட்டுதற்குக் கூறிய இலக்கணந் துறைபோகக் கற்ற மல்லர் என்க.

( 135 )
2734 வெண்டுகின் மாலை சாந்தம்
  விழுக்கலம் விதியிற் சோ்த்தி
நுண்டுகிற் றிரைகள் சோ்ந்த
  நூற்றுலா மண்ட பத்துக்