பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1547 

2734 கண்டிரண் முத்த மென்றோட்
  காவிக்கண் மகளிர் போற்றி
யெண்டிசை மருங்கு மேத்த
  வினிதினி னேறி னானே.

   (இ - ள்.) வெண்துகில் மாலை சாந்தம் விழுக்கலம் விதியிற் சேர்த்தி - வெண்மையான துகிலையும் மாலையையும் சாந்தையும் சிறந்த கலன்களையும் முறைப்படி அணிவித்து; நுண்துகில் திரைகள் சேர்ந்த நூறு உலாம் மண்டபத்து - நுண்ணிய துகிலால் ஆகிய திரைகள் சூழவிட்ட நூறடி உலாவுதலையுடைய மண்டபத்தில்; கண்திரள் முத்தம் மென்தோள் காவிக்கண் மகளிர் போற்றி - இடம் திரண்ட முத்துக்களை அணிந்த மெல்லிய தோள்களையும் நீலமலர் போன்ற கண்களையும் உடைய மாதரார் வாழ்த்தி; எண்திசை மருங்கும் ஏத்த - எட்டுத் திக்கினும் நின்று புகழ; இனிதினின் ஏறினான் - மகிழ்ந்து புகுந்தான்.

   (வி - ம்.) ‘மண்டபத்து ஏறினான்‘ என்க. பொருட்கண் தோன்றும் வரையறைக் குணப்பெயராகிய நூறென்னும் எண்ணுப் பெயர் எண்ணுடைய பொருள்மேல் ஆகுபெயராய் நின்றது; ‘ஆறறி யந்தணர்‘ (கலி.1) என்றாற்போல. உண்டால் நூறடி உலாவுதல் வேண்டும் என்று மருத்துவ நூல் கூறியதனைக் கூறினார்.

( 136 )
2735 நெய்வளங் கனிந்து வாச
  நிறைந்துவான் வறைக ளார்ந்து
குய்வளங் கழுமி வெம்மைத்
  தீஞ்சுவை குன்ற லின்றி
யைவரு ளொருவ னன்ன
  வடிசினூன் மடைய னேந்த
மைவரை மாலை மார்பன்
  வான்சுவை யமிர்ந்த முண்டான்.

   (இ - ள்.) நெய்வளம் கனிந்து வாசம் நிறைந்து - நெய்மிகுதியாக வார்க்கபெற்று, மணம் நிறைந்து ; வான் வறைகள் ஆர்ந்து - சிறந்த பொரிக் கறிகள் நிறைந்து; குய்வளம் கழுமி - தாளிப்பு நன்கு பொருந்தி, வெம்மைத் தீ சுவை குன்றல் இன்றி - சூட்டினால் உண்டான இனிய சுவை குறையாமல்; ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த - வீமனைப் போன்ற சமையற் கலையில் தேர்ந்த மடையன் ஏந்தி நிற்க; மைவரை மாலை மார்பன் - கரிய மலைபோலும் மார்பினான்; வான் சுவை அமிர்தம் உண்டான - சிறந்த சுவையுடைய அடிசிலை உண்டான்.