பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1554 

2748 அருமையின் னெய்தும் யாக்கையும் யாக்கைய தழிவுந்
திருமெய் நீங்கிய துன்பமுந் தெளிபொருட் டுணிவுங்
குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும்
பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய்.

   (இ - ள்.) பெரியோய்! - பெரியோனே!; அருமையின் எய்தும் யாக்கை - தவத்தாற் பெறுகின்ற மக்கள் யாக்கையையும்; யாக்கையது அழிவும் - அந்த யாக்கை நூறாண்டளவும் நிலைபெறாமல் இடையே அழிகின்ற அழிவையும்; திரு மெய் நீங்கிய துன்பமும் - நல்வினை மெய்யினின்றும் நீங்கப்பட்டனவாகிய நாற்கதித் துன்பமும்; தெளிபொருள் துணிவும் - துணியப்படும் பொருளையும், அப்பொருளைத் துணியும் துணைவையும்; குருமை எய்திய குணநிலை கொடை பெறு பயனும் - நிறத்தைப் பெற்ற சீலத்தினது நிலையையும், தானத்தையும், தானத்தாலும் சீலத்தாலும் (காட்சியாலும்) பெறும் பயனையும்; பெருமை வீட்டொடும் பேசுவல் - பெருமையையுடைய வீட்டிலக்கணத்தோடும் கூறுவேன்; இது கேள் - (அவற்றுள்) இப்பெறுதற் கருமையை முதலிற் கேள்.

   (வி - ம்.) நீங்கிய : வினையாலணையும் பெயர். இது என்றது பெறுதற்கருமையை. குரு என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்தது. ‘திருமை‘ என்றும் பாடம். குண நிலையையும் கொடையையும் என உருபும் உம்மையும் விரிக்க.

( 150 )

8. பெறுதற்கருமை

2749 பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட்
டிரைசெய் தென்கட விட்டதோர் நோன்கழி சிவணி
யரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற்
பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.

   (இ - ள்.) அரச! - அரசனே!; பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறல் - பெரியனவாகிய பிறப்புக் களிலிருந்து தப்பி, இவ்வுலகிலே மக்கட் பிறப்பை அடைதல்; பரவை வெண் திரை வடகடல் படுநுகத் துளையுள் - பரப்பையுடைய வெள்ளிய அலைகளையுடைய வட கடலிலே இட்ட நுகத்துளையிலே; திரை செய் தென்கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி - அலையுடைய தென் கடலிலே இட்டதாகிய ஒரு பெரிய கழி சென்று எய்தி; அத்துளை அகவயின் செறிந்தென அரிது - அத்துளையின் உள்ளே சென்று செறிந்தது எனும்படி அரியது.

   (வி - ம்.) “வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல் கடல் வால்நுகத்தின் - துளைவழி நேர் கழி கோத்தென“ (திருச்சிற். 6); “தென் கடல்