பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1561 

திறந்து; ஆம் பொருள் உணர்த்தி - (முடிவில்) ஆகும் பொருள் (இது என்று அறியாதார்க்கு) அறிவித்து ; ஈமம் ஏறுதல் - சுடு காட்டில் ஏறுதல்; இகல் அமர் கடந்தோய் - பகைவர் போரை வென்றவனே; ஒருதலை - உறுதி ஆகும்.

   (வி - ம்.) கடைப்பிடி - குறிக்கோள். அஃதாவது : ”இன்றாது மிந்நிலையே யாதும் இனிச்சிறிது நின்றாது மென்று” ஆக்கத்தைக் குறிக்கொண்டிருத்தல். தூய்மையில் குளம் : உடம்பிற்குவமை. ஆம்பொருளுணர்த்தலாவது, ”யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றி மற்றாங்கே நிலையாது நீத்துவிடும்” எனத் தன் அழிவினாலே உலகத்தார்க்குணர்த்துதல்.

( 162 )
2761 தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித் திலகவெண் குடையோ
யீங்கி தன்னியு மிமையவ ரமையலர்க் கடந்த
தாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும்
யாங்க ணாரவ ரூரொடு பேரெமக் குரையாய்.

   (இ - ள்.) தேன் கொள் பூங்கண்ணித் திருமுடித் திலக வெண்குடையோய்! தேனையுடைய மலர்க்கண்ணியணிந்த திருமுடியையும் உயர்ந்த குடையையும் உடையோய்!; ஈங்கு இது அன்றியும் - இவ்வுலகிற்க்குக் கூறிய இந் நிலையாமையே அன்றியும்; இமையவர் அமையலர்க் கடந்த - வானவரின் பகைவரை ஆங்குச் சென்று வென்ற; தாங்கும் - திருவை ஒழிந்த அரசர்பாற் செல்லாமல் தம்மிடத்தே தாங்குகின்ற; மாவண்கைச் சக்கரம் மிக்கு உயர் பெருங்கொடையாளராய், ஆணையாழி பிற அரசரினும் மேம்பட்டு உயர்தற்குக் காரணமாகி; பிறரும் - சக்கரவர்த்திகளும்; யாங்கணார்? எங்குளார்?; எமக்கு அவர் ஊரொடு பேர் உரையாய் - எமக்கு அவருடைய ஊரையும் பெயரையும் கூறுவாய்?

   (வி - ம்.) உலகில் அரசர் எல்லோரும் வணங்க இருத்தலிற் சக்கரவர்த்திகளைப், 'பிறர்' என்றார்.

   பொதுமக்கள் போன்று சக்கரவர்த்திகளும் ”நிலமிசைத்துஞ்சினார்” என்பதே.

( 163 )

10. நரக கதித் துன்பம்

வேறு

2762 வெவ்வினை செய்யு மாந்த ருயிரெனு நிலத்து வித்தி
யவ்வினை விளையு ளுண்ணும் மவ்விடத் தவர்க டுன்ப
மிவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளஞ்
செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே.