| முத்தி இலம்பகம் |
1564 |
|
|
|
ஆடுகின்ற பந்தைப்போல; பொங்கி எழுந்து வந்து வீழ்ந்து உடைந்து உருகி மாழ்குபு கிடப்பர் கண்டாய் - (தீயினின்றும்) பொங்கி எழுந்து (மீட்டும் அதனுள்) வீழ்ந்து உடைந்து உருகி மயங்கிக் கிடப்பர் காண்.
|
|
(வி - ம்.) வெந்தடி - விரும்பித் தின்றற்குக் காரணமான தசை. வெந்நோய் - தீவினை. மாழ்குபு - மயங்கி, கந்து - தூண், கடாம் - மதம், வேந்தே - என்றது சீவகனை.
|
( 167 ) |
| 2766 |
வயிரமுண் ணிரைத்து நீண்ட | |
| |
வார்சினை யிலவ மேற்றிச் | |
| |
செயிரிற்றீ மடுப்பர் கீழாற் | |
| |
சென்னுனைக் கழுவி லேற்றி | |
| |
மயிருக்கொன் றாக வாங்கி | |
| |
யகைத் தகைத் திடுவர் மன்னா | |
| |
வுயிரைப்பே துறுத்து மாந்த | |
| |
ருயிரைப்பே துறுக்கு மாறே. | |
|
|
(இ - ள்.) மன்னா! - வேந்தனை!; உயிரைப் பேது உறுத்தும் மாந்தர் உயிரைப் பேது உறுக்கும் ஆறு -ஒன்றன்உயிரை வருத்தம் உறுத்தும் மக்களின் உயிரை வருத்தப்படுத்தும் வகையைக் கேள்; வயிரமுள் நிரைத்து நீண்ட வார்சினை இலவம் ஏற்றி - வைரமாகிய முள்ளை முழுக்க நிரைத்து நீண்ட பெரிய கிளைகளையுடைய இலவமரத்திலே ஏற்றி; கீழால் செயிரில் தீ மடுப்பர் - கீழே குற்றம் அற்ற நெருப்பை எரிப்பர்; செல் நுனைக் கழுவில் ஏற்றி - (உடம்பிலே) செல்லும் முனையையுடைய கழுவிலே ஏற்றி; மயிருக்கு ஒன்றாக வாங்கி அகைத்து அகைத்திடுவர் - (தாம் கொன்ற விலங்குகளின்) ஒரு மயிருக்கு ஒரு தசையாக வாங்கி அறுத்து அறுத்துப் போகடுவர்.
|
|
(வி - ம்.) 'வயிரமுள்' என்றார் உடம்பிலே தைத்து முனைமுறியாத படி. இலவில் ஏற்றி எரிப்பதேயன்றித் தசையை அறுத்தும் போகடுவர் என்க.
|
|
சிறப்புக்கருதி ஆண்பாலிற்கு மட்டும் கூறினார், எனினும் பெண் பாற்குங் கொள்க. ஏதிலான் - அயலான். தாரம் - மனைவி. ” எளிதென இல்லிறப்பான” என்றார் வள்ளுவனாரும் (குறள். 145) ஊதுலை: வினைத்தொகை. ஆ : இரக்கக் குறிப்பு. ஆல் : அசை.
|
( 168 ) |
| 2766 |
துடிக்குரற் குரல பேழ்வாய்த் | |
| |
தொடர்ப்பிணி யுறுத்த செந்நாய் | |
| |
மடுத்திட வைர வூசி | |
| |
வாளெயி றழுந்தக் கௌவிப் | |
| |
புடைத்திட வலறி யாற்றார் | |
| |
பொன்றினும் பொன்றல் செல்லா | |
| |
ருடுப்பினம் வேட்டஞ் செய்தா | |
| |
ருழப்பவாற் றுன்ப மாதோ. | |
|