பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1577 

வைது உரைக்கும் - வளமுறும் மலைபோன்ற பெருமையை உடைய முனிவர்களை இகழ்ந்து கூறுகின்ற, பல்லவரே அன்றி - பலருமே அல்லாமல்; பகுத்து உணாப் பாவிகளும் - (பிறருக்குக்) கொடுத்துண்ணாத பாவிகளும்; அல்குல் விலைபகரும் ஆய் தொடியர் ஆதியர் - அல்குலை விற்கும் விலைமகளிரும் முதலானோர்; விலங்காய்ப் பிறப்ப - விலங்குகளாகப் பிறப்பார்கள்.

   (வி - ம்.) இதனால் விலங்குகட்கும் ஊழ்வினை யுண்மைக்குக் காரணம் தெரிந்தோதினார். எனவே தீவினை மாக்களே விலங்குகளாகி அப்பிறப்பின்கண் பழவினையின் பயனை நுகர்ந்து மேலும் நரக கதியும் எய்துவர் என்பது கருத்தாயிற்று,

( 191 )

12. மக்கட் கதித் துன்பம்

2790 தம்மை நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கிச்
செம்மை மலர்மார்ப மட்டித் திளையார்தோள்
கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர்
வெம்மை மிகுதுன்பம் வேந்தே சிலகேளாய்.

   (இ - ள்.) தம்மை நிழல் நோக்கி - தம்மைக் கண்ணாடியிலே பார்த்து; தாங்கார் - தம் அழகின் பெருமையைத் தாங்க வியலாராய்; மகிழ்தூங்கி - மகிழ்ச்சியிலே திளைத்து; செம்மைமலர் மார்பம் மட்டித்து - செந்நிறம் பொருந்திய மார்பிலே பூசப்படுவன பூசி;  கொம்மைக் குழகு - பெரிய இளமைச் செவ்வியாலே; இளையார் தோள் ஆடும் - மகளிர் தோளைத் தழுவும்; கோலவரை மார்பர் - அழகிய மலையனைய மார்பரின்; வெம்மை மிகு துன்பம் - கொடுமை மிக்க துன்பங்களிற்; சில கேளாய் - சிலவற்றையேனும் கேட்பாயாக.

   (வி - ம்.) வரை மார்பர் : இகழ்ச்சி.

   நிழல் கண்ணாடியின்கண் தம் நிழல் என்க. தம்மழகின் பெருமையாற் செருக்கெய்தி என்றவாறு. மட்டித்தல் - பூசுதல். கொம்மை - பெருமை. குழகு - இளமை. அவை முழுதும் சொல்லவியலாது ஆகலின் ஒருசில கூறுதும், கேள் என்றவாறு.

( 192 )
2791 ஈருட் டடிமூடி யீண்டுமலப் பண்டப்
போர்வை புழுமொய்ப்பப் பொல்லாக் குடர்சூடிச்
சார்தற் கரிதாகித் தானின் றறாவள்ள
னீர்வாய்ச் சுரம்போந்தார் தம்மை நினையாரோ.

   (இ - ள்.) ஈருள் தடிமூடி - (தாய் வயிற்றிலே) ஈருளாகிய தடியை மூடி; ஈண்டும் மலப்பண்டப் போர்வைப் புழு மொய்ப்ப - (தமக்கு அடைத்த காலங்கள் தோறும்) உறுப்புக்கள் திரள்