பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1607 

2842 அடங்கலர்க் கீந்த தானப்
  பயத்தினா லலறு முந்நீர்த்
தடங்கட னடுவுட் டீவு
  பலவுள வவற்றுட் டோன்றி
யுடம்பொடு முகங்க ளொவ்வா
  ரூழ்கனி மாந்தி வாழ்வர்
மடங்கலஞ் சீற்றத் துப்பின்
  மானவேன் மன்ன ரேறே.

   (இ - ள்.) மடங்கல் அம் சீற்றத் துப்பின் மானவேல் மன்னர் ஏறே! - சிங்கம் போன்ற சீற்றத்தினையும் வலிமையையுமுடைய பெருமை பொருந்திய வேலேந்திய அரசர்க்கரசே!; அடங்கலர்க்கு ஈந்த - ஐம்பொறிகளையும் வாட்டாதார்க்குக் கொடுத்த; தானப் பயத்தினால் - தானத்தின் விளைவால்; அலறும் முந்நீர்த் தடங்கடல் நடவுள் பல தீவு உள - முழங்குகின்ற மூன்று தன்மையுற்ற பெரிய கடலின் நடுவிலே பல தீவுகள் உள; அவற்றுள் உடம்பொடு முகங்கள் ஒவ்வார் தோன்றி - அவற்றுள் உடம்பு மக்களுடம்பும் முகம் விலங்கின் முகமுமாய்த் தோன்றி; ஊழ் கனி மாந்தி வாழ்வர் - தாமே கனிந்து வீழ்ந்த பழங்களை யுண்டு வாழ்வார்கள்.

   (வி - ம்.) இது முற்கூறிய புண்ணிரல்லார்க்குச் செய்த தானத்துக்குப் பயன் கூறியது.

   இச்செய்யுள் பரிமேலழகரால் 276 ஆம் திருக்குறளுக்கு மேற்கோளாக எடுக்கப்பட்டது. முந்நீர்த்தடங்கடல் - மூன்று நீர்மையையுடைய பெரிய கடல் - முத்தொழிலையுடைய கடலுமாம். ஊழ்கனி : வினைத்தொகை - மடங்கல் - அரிமா. துப்பு - வலிமை.

( 244 )

18. சீலப்பயன், காட்சிப்பயன்

2843 செப்பிய சீல மென்னுந்
  திருமணி மாலை சூழ்ந்தார்
கப்பத்து ளமர ராவர்
  காட்சியி னமிர்த முண்டா
ரொப்பநீ ருலக மெல்லா
  மொருகுடை நிழற்றி யின்பங்
கைப்படுத் தலங்க லாழிக்
  காவல ராவர் கோவே.

   (இ - ள்.) கோவே! - அரசே!; செப்பிய சீலம் என்னும் திரு மணிமாலை சூழ்ந்தார் - கூறிய சீலம் என்கிற அழகிய மணி