| முத்தி இலம்பகம் |
1611 |
|
|
|
பாவத்தையும்; வல்லையே பணிமின் என்றனன் - விரைவாக அருளிச் செய்க என வேண்டினன்.
|
|
(வி - ம்.) கடுகத்துறத்தற்கு 'வல்லை' என்றனல், பணிமினம் : அம் : அசை.
|
( 251 ) |
| 2850 |
கதிர்விடு திருமணி யங்கைக் கொண்டதொத் | |
| |
தெதிர்வது மிறந்தது மெய்தி நின்றது | |
| |
மதிர்வறு தவவிளக் கெறிப்பக் கண்டவன் | |
| |
பதரறு திருமொழி பணிக்கு மென்பவே. | |
| |
|
|
(இ - ள்.) கதிர்விடு திருமணி அங்கை கொண்டது ஒத்து - ஒளிவிடும் அழகிய மணியை அகநங்கையிலே கொண்டால் ஆண்டுள்ளவற்றை அது விளக்குந் தன்மை போல; எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும் - எதிர்வு இறப்பு நிகழ்வு என்னும் முக்காலத்தையும்; அதிர்வு அறு தவ விளக்கு எறிப்பக் கண்டவன் - நடுக்கம் அற்ற தவவிளக்கு விளக்குதலாலே உணர்ந்தவன்; பதர் அறு திருமொழி பணிக்கும் - பொய்யற்ற அழகிய மொழியாலே கூறுவான
|
|
(வி - ம்.) என்ப, ஏ : அசைகள்.
|
|
திருமணி - மாணிக்கமணி; இது தவத்திற்குவமை. எதிர்வது - எதிர் காலத்து நிகழ்ச்சி. இறந்தது - இறந்த காலத்து நிகழ்ச்சி. எய்தி நின்றது - நிகழ்கால நிகழ்ச்சி; பதர் என்றது - பயனிலாச் சொற்களை.
|
( 252 ) |
| 2851 |
முழுநீர் வளைமேய் தலின்முத் தொழுகிப் | |
| |
பொழிநீர் நிலவின் னிருள்போழ்ந் தரிசிக் | |
| |
கழுநீ ரொழுகக் கழுநீர் மலருந் | |
| |
தழுநீ ரதுதா தகியென் றுளதே. | |
| |
|
|
(இ - ள்.) முழுநீர் வளை - கடலில் உள்ள சங்கு; அரிசிக்கழுநீர் மேய்தலின் - (ஊரிடத்ததாய் வந்து) அரிசிக் கழுநீரிலே மேய்வதால்; முத்து ஒழுகி - அவை சொரிந்த முத்துக்கள் ஒழுங்குபட்டு; பொழிநீர் நிலவின் இருள் போழ்ந்து ஒழுக - ஒளி பொழியும் நீர்மையுடைய நிலவினைப்போல இருளைக் கெடுத்து (அணைபோலக் கழுநீரைத் தடுத்து) ஒழுகுவதால்; கழுநீர் மலரும் - கழுநீர் மலரை மலர்விக்கின்ற; தழுநீரது தாதகி என்று உளது - வளந்தழுவிய தன்மையுடையது தாதகி என்றொரு நாடு உளது.
|
|
(வி - ம்.) முத்தொழுகக் கழுநீர் மலரும் எனக் காரண காரியமாக்குக.
|
( 253 ) |