| முத்தி இலம்பகம் | 
1612  | 
 | 
  | 
|  2852 | 
கயல்பாய்ந் துகளக் கடியன் னம்வெரீஇ |   |  
|   | 
வியனீள் சுடர்வெண் மதிசோ் வதுபோ |   |  
|   | 
லயலே யலர்தா மரைசோ்ந் துறையும் |   |  
|   | 
வயல் சூழ்ந் தனவூர் வளமார்ந் தனவே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கயல் பாய்ந்து உகளக் கடி அன்னம் வெரீஇ - கயல் பாய்ந்து பிறழ்வதாலே மிக்க அன்னம் அஞ்சி; வியன் நீள் சுடர் வெண்மதி சேர்வதுபோல் - (வானிலே) பெரிதாக மேம்பட்ட ஞாயிற்றை வெண்திங்கள் அணைவது போல; அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும் - அருகே மலர்ந்த தாமரையை அடைந்து வாழ்கின்ற; வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தன - வயல்கள் சூழ்ந்தனவாகிய ஊர்கள் செல்வம் நிறைந்தன. 
 | 
| 
    (வி - ம்.) கடியன்னம் - மிகுதியான அன்னப் புட்கள். வெரீஇ - வெருவி - அஞ்சி. வியனீள் சுடர் என்றது ஞாயிற்றை. இது தாமரை மலர்க்குவமை. வெண்மதி அன்னத்திற்குவமை. 
 | 
( 254 ) | 
|  2853 | 
அவணத் தவர்கூந் தலகிற் புகையைச் |   |  
|   | 
சிவணிச் சிறுகால் கமுகம் பொழில்சோ்ந் |   |  
|   | 
துவணுய்த் திடமஞ் செனநின் றுலவும் |   |  
|   | 
பவணத் தொருபாங் கினதா லளிதோ. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) சிறுகால் - தென்றற் காற்று; அவணத்தவர் கூந்தல் அகில் புகையைச் சிவணி - அந் நாட்டின் ஊர்களில் இருப்பார் கூந்தலுக்கிட்ட அகிற் புகையை (முதலிற்) பொருந்தி; கமுகம் பொழில் சேர்ந்து - (பின்னர்) கமுகந் தோட்டத்தை அடைந்து; உவண் உய்த்திட - (அதன் மணத்தையும் பெற்று) அப் புகையை அந்நாடெங்கும் செலுத்த; மஞ்சு என நின்று உலவும் - (அப்புகை) வெண்முகிலென நின்று உலாவும்; பவணத்து ஒரு பாங்கினது - நாகருலகின் ஒரு கூறு போன்றது; அளிதோ? - (ஆகையால்) அது அளிக்கத்தக்கதோ? (அன்று.) 
 | 
| 
    (வி - ம்.) அந்நாடு கேடின்றி யிருத்தலின் அளிக்க வேண்டாததாயிற்று. பாங்கினதால் : ஆல் : அசை. பாங்கினதால் - பாங்கினதாகையால் என்றுமாம். 
 | 
( 255 ) | 
|  2854 | 
மதியுஞ் சுடரும் வழிகா ணலுறாப் |   |  
|   | 
பொதியும் மகிலின் புகையுங் கொடியு |   |  
|   | 
நிதியின் கிழவன் னினிதா வுறையும் |   |  
|   | 
பதிபொன் னகரின் படிகொண் டதுவே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மதியும் சுடரும் வழிகாணல் உறா - திங்களும் ஞாயிறும் வழிகாணல் இயலாதவாறு; பொதியும் அகிலின் 
 |