| முத்தி இலம்பகம் |
1615 |
|
|
|
(இ - ள்.) இலங்கு அரி பரந்த வாள்கண் இளையவர் புலவி நீங்க - விளங்கும் செவ்வரி பரவிய வாளனைய கண்களையுடைய மங்கையரின் புலவி நீங்கும்படி; சிலம்பு எனும் வண்டு பாடச் சீறடிப்போது புல்லி - அவர்களுடைய சிலம்பாகிய வண்டுகள் முரலும்படி சிற்றடி மலர்களைத் தழுவி; அலங்கல்வாய்ச் சென்னி சேர்த்தி - மாலையைக் கொண்ட தன் முடியிலே சேர்த்து; அரிமதர் மழைக்கண் பில்க - செவ்வரி பரந்த குளிர்ந்த கண்கள் உவகை நீரைத் துளிக்க; நலம் கவர்ந்து உண்டு - அவர்களுடைய அழகைக் கவர்ந்து பருகி; நண்ணார் நாம் உறக் கழிக்கும் - பகைவர் அச்சம் உறக் காலம் போக்குவான்.
|
|
(வி - ம்.) காமம் நுகரினும் வீரங்குன்றாமை தோன்ற 'நண்ணார் நாம் உற' என்றார்.
|
|
மடங்கல் - அரிமா. மொய்ம்பு - வலிமை. பங்கயத்தடம் - தாமரைக்குளம். பார்ப்பு - குஞ்சு. அனம் - அன்னம்.
|
( 260 ) |
வேறு
|
| 2859 |
மங்கையர் தம்மொடு மடங்கன் மொய்ம்பினான் | |
| |
பங்கயப் பனித்தடஞ் சேரப் பார்ப்பனஞ் | |
| |
செங்கயற் பேரின மிரியச் செவ்வனே | |
| |
பொங்கிமேற் பறந்துவிண் புதைந்த தென்பவே. | |
| |
|
|
(இ - ள்.) மடங்கல் மொய்ம்பினான் - சிங்கம் போன்ற ஆற்றலையுடைய அவன்; மங்கையர் தம்மொடு பங்கயப் பனித்தடம் சேர - அம் மாதர்களுடன் (நீர் விளையாடுதற்குத்) தாமரைநிறைந்த குளிர்ந்த பொய்கையை அடைந்தபோது; பார்ப்பு அனம் - (ஆண்டுறைந்த) பார்ப்புகளுடன் கூடிய அன்னத்திரள்; செங்கயல் பேரினம் இரிய - செங்கயல்களின் பெருந்திரள் ஓடும் படி; செவ்வனே மேல் பொங்கி பறந்து விண் புதைந்தது - செவ்வையாக மேலே பொங்கிப் பறந்ததால் விண் மறைந்தது.
|
|
(வி - ம்.) பறந்த - பறக்க : எச்சத்திரிபு. என்ப, ஏ : அசைகள்.
|
( 261 ) |
வேறு
|
| 2860 |
வேய்ந்தவெண் டாமரைக் கோதைபோல | |
| |
விசும்பிற் பறக்கின்ற வெள்ளையன்ன | |
| |
மாய்ந்த முகிலாடைத் திங்கட்கண்ணி | |
| |
யாகாய மென்னு மரிவைசாயற் | |
| |
|