| முத்தி இலம்பகம் |
1620 |
|
|
|
(வி - ம்.) இச் செய்யுளிலும், சிறையாவது, தான் நினைத்தவறொழுகுதலின்றிப் பிறர் நினைத்தவாறே ஒழுகும்படி காத்தல். இளம் பார்ப்புக் கிளையைப் பிரிந்திருந்து ஆற்றின் அருமை நோக்கி, 'அருஞ்சிறை' என்றார். என்றும்,
|
|
”ஈண்டுப் பார்ப்பைப் பிரித்ததற்குத் தானும் பிரிந்தும், அதனைச் சிறை செய்ததற்குத் தானுஞ் சிறைப்பட்டும் அத் தீவினை நுகர்ந்தான் என்று முன்னர்ப் பொருளுரைத்ததே தேவர்க்குக் கருத்தென்றுணர்க; என்னை? நீ இப் பார்ப்பைக் கட்டி வைத்ததனையுங் கேளென்று அவனை நோக்கி ஈண்டு அரசன் கூறாமையின்” என்றும் நச்சினார்க்கினியர் கூறுகின்றனர்.
|
( 269 ) |
வேறு
|
| 2868 |
அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய் | |
| |
மறம்புரிகொ ணெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச் | |
| |
செறும்பெரிய தீவினைகள் சென்றுகடி தோடி | |
| |
யுறும்பெரிய துன்ப முயிர்க் கொலையும் வேண்டா | |
| |
|
|
(இ - ள்.) அலங்கல் அணி வேலோய்! - மாலை புனைந்த வேலோனே!; பெரிய தீவினைகள் கூறின் - பெரிய தீவினையின் இயலைக் கூறின்; மறம் புரிகொள் நெஞ்சம் வழியாப் புகுந்தது ஈண்டி - அவை பாவத்தை விரும்பிய நெஞ்சின் வழியாகப் புகுந்து திரண்டு; கடிது ஓடிச்சென்று செறும் - தம்மைச்செய்த வுயிரோடு விரைந்தோடிச்சென்று அதனைத் துன்புறுத்தும்; பெரிய துன்பம் உறும் - துன்புறுத்தும்பொழுது அது பெரிய துன்பம் உறும்; உயிர்க்கொலையும் வேண்டா - (ஆதலால்) அத்தீவினைக்கு அடியதாகிய உயிர்க்கொலையும் நுமக்கு வேண்டா; பெரிய அறம் - இஃது அறங்களுட் பெரிய அறம்.
|
|
(வி - ம்.) தீவினைகள் கூறின் எனவும் உயிர்க்கொலையும் வேண்டா, இது பெரிய அறம் என்றும் இயைத்துக்கொள்க. சுட்டு வருவித்துக் கொள்க.
|
| ”ஒன்றாக நல்லது கொல்லாமை” |
|
|
என்றார் திருவள்ளுவனாரும் (323.) உயிரோடே ஓடி என்றும் அது உறும் என்றும் வருவித்தோதுக.
|
( 270 ) |
| 2869 |
மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்க | |
| |
ளையமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு | |
| |
மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர் | |
| |
பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான். | |
| |
|
|
(இ - ள்.) மெய்யுரை வையகத்து நின்ற புகழ் மன்னும் - மெய்யுரை கூறின் இவ்வுலகத்து நிலையான புகழ் பொருந்தும்;
|