பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1621 

மேலுலகம் விளங்கும் மணிக்கோபுரங்கள் (மன்னும்) - (மறுமையில்) மேலுலகிலே விளக்கமான மணிக்கோபுரங்களையுடைய கோயில்கள் பொருந்தும்; (பொய்யுரை) மையல் விளை மாநகர கோபுரங்கள் - (மன்னும்) பொய்யுரையைக் கூறினால் அதற்கு (இம்மையிற்) பழியும் (மறுமையில்) நரகத்துக்கோயில்களும் பொருந்தும்; ஐயம் இலை கண்டீர் - இவை ஐயமில்லை அறிமின்; வேண்டா புறத்து இடுமின் என்றான் - (ஆதலால்) அப்பொய்யுரையும் வேண்டாம்; கைவிடுமின் என்றான்.

   (வி - ம்.) மெய்யுரை கூறின் என்றும் பொய்யுரை கூறின் என்றும் வருவித்தோதுக. மெய்யுரைக்குப் புகழ் கூறியதற்கேற்பப் பொய்யுரைக்குப் பழியைக் கொள்க. வையகத்து என்றது இம்மையில் என்பது பட நின்றது. எனவே மறுமையில் என வருவித்தோதுக.

( 271 )
2870 முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற
வளவிறுயர் செய்வரிவண் மன்னரத னாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்குங்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே.

   (இ - ள்.) முளரிமுகம் நாகம் முளை எயிறு உழுதுகீற - தாமரைப் பூப்போலும் புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய யானையின் முளைத்த எயிறு உழுது பிளக்க; இவண் மன்னர் அளவு இல்துயர் செய்வர் - இவ்வுலகிலே மன்னர் அளவில்லாத துயரைச் செய்வர்; வீழ்கதியுள் விளைவு அரிய மாதுயரம் உய்க்கும் - (பின்னர்) நரகத்தில் விளைதற்கரிய பெரிய துன்பங்களை அது தானே செலுத்தும்; அதனாலும் களவு கடன் ஆகக் கடிந்திடுதல் சூது - அதனாலும் அக்களவை மேற்கொண்டு நீக்குதல் உபாயம் ஆகும்.

   (வி - ம்.) முளரி - தாமரை. தாமரைப் பூப்போலும் புகரையுடைத்தாகிய யானையினது முளைத்த எயிறு என்க. சூது - ஈண்டு உபாயம் என்பதுபட நின்றது.

2871 மடத்தகைய நல்லார் மனங்கரிய மற்றார்
பிடர்த்தலையொள் வாள்போற் பிறர்மனைகள் சேரி
னெடுப்பரிய துன்பத் திடைப்படுவ ரின்னா
நடுக்குடைய காமம் விடுத்திடுத னன்றே.

   (இ - ள்.) மடத்தகைய நல்லார் மனம்கரிய - இளமை சான்ற மங்கையராகிய தம் மனைவியர் மனம் வருந்த; மாற்றார் பிடர்த்தலை ஒள் வாள்போல் பிறர் மனைகள் சேரின் - பகைவர் கழுத்தில் வைத்த ஒள்ளிய வாளைப்போற் கொடிதாகிய பிறர் மனையாளைச் சேர்தலைக்கொள்ளின்; எடுப்ப அரிய துன்பத்திடைப்