| முத்தி இலம்பகம் | 
1624  | 
 | 
  | 
| 
 அவைதம் கிளையின் நீங்கி அழவாங்கி - அவற்றைத் தம் உறவினின்றும் நீங்கி வருந்தப் பிரித்து; காவல் செய்து வைத்தவர்கள் - இம்மையிலே காவலிட்டு வைத்தவர்கள்; தம் கிளையின் நீங்கிப் போவர் - (மறுமையில) தம் உறவினின்றும் பிரிந்து, பிறராற் காவல் செய்யப்பட்டுப் போவர்; புகழ் நம்பி - புகழ் பெற்ற நம்பியே!; இது பொற்பு இலது கண்டாய் - (ஆதலின்) இதுவும் அழகில்லாதது காண். 
 | 
| 
    (வி - ம்.) ”கட்டுதல் கூட்டில் அடைத்தல் செய்தற்குரிய அல்லா இளமைப் பருவத்தனவற்றையே ஈண்டுங் கூறலின், 'காவல் செய்து' என்றார். ஈண்டுக் காவல் செய்து வைத்தவர் என்று கூறலின், முன்னம் கட்டுண்டான் என்றற்குக் காரணம் இன்மையுணர்க” என்று இச் செய்யுளிலும் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். 
 | 
( 277 ) | 
வேறு
 | 
|  2876 | 
அல்லித்தா ளற்ற போது |   |  
|   | 
  மறாதநூ லதனைப் போலத் |   |  
|   | 
தொல்லைத்தம் முடம்பு நீங்கத் |   |  
|   | 
  தீவினை தொடர்ந்து நீங்காப் |   |  
|   | 
புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து |   |  
|   | 
  புக்குழிப் புக்குப் பின்னின் |   |  
|   | 
றெல்லையி றுன்ப வெந்தீச் |   |  
|   | 
  சுட்டெரித் திடுங்க ளன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அல்லித்தாள் அற்றபோதும் அறாத நூலதனைப் போல - அல்லித்தண்டு அற்று வீழ்ந்த போதும் நூல் அறாது தொடர்ந்து நிற்குந் தன்மைபோல; தொல்லைத் தம் உடம்பு உயிரை நீங்க - பழைய தம் உடம்பு உயிர நீங்கிக் கிடக்க; தீவினை தொடர்ந்து நீங்கா - (பழைய) தீவினை மட்டும் (உயிரைத்) தொடர்ந்து நீங்காமல்; சூழ்ந்து புல்லிக்கொண்டு - சூழவிருந்து பற்றிக்கொண்டு; புக்குழிப்புக்கு - அவ்வுயிர்போய்ப் புக்க உடம்பிலே தானும் புகுந்து. பின் நின்று - பின்னே நின்று; எல்லையில் துன்ப வெந்தீச் சுட்டு எரித்திடுங்கள் - அளவற்ற துன்பஞ்செய்யும் கொடிய நெருப்பாகச் சுட்டு எரித்திடும். 
 | 
| 
    (வி - ம்.) தாள் - தண்டு. உடம்பிற்கு அல்லித்தண்டும், தீவினைக்கு அதன் நூலும் உவமைகள். ”எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்றாடும்”, என்றார் திருவள்ளுவனாரும். வீயாது பின் சென்றடுதலாவது ஒருவன் நிழல் நெடிதாகச் சென்றும் அவன் காலடியில் வற்துறுவது போல வினையும் வந்து துன்புறுத்தும் என்பதாம். எரித்திடுங்கள் என்புழி, கள் : அசை. 
 | 
( 278 ) |