பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1625 

2877 அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற்
பறவையு நிழலும் போலப் பழவினை யுயிரோ டாடி
மறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கும் பால
கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம்.

   (இ - ள்.) அறவிய மனத்தர் ஆகி - அறத்தையுடைய மனத்தராய்; ஆர் உயிர்க்கு அருளைச் செய்யின் பல்லுயிர்க்கும் அருளைச் செய்தால்; பழவினை பறவையும் நிழலும்போல உயிர்ரோடு ஆடி - அப் பழமையான நல்வினை பறவையும் நிழலும் நீங்காது திரியுமாறுபோல் அவ்வுயிரை விடாமல் திரிந்து; ஒன்றானும் மறவி இன்றி - சிறிதும் மறதியில்லாமல்; மனத்ததேசுரக்கும் பால கறவையின் - மனத்தில் நினைத்ததையே கொடுக்கும் பாலவாகிய கறவைப் பசுவைப்போல; தம்மால் காம் உறப்பட்ட எல்லாம் கறக்கும் - தம்மால் விரும்பப்பட்ட எல்லாவற்றையும் கொடுக்கும்.

   (வி - ம்.) அறவிய மனம் - அறத்தை விரும்பும் நெஞ்சம். பழவினை - அந் நல்வினை. உயிர்க்குப் பறவையும் பழவினைக்கு நிழலும் உவமைகள். வள்ளுவனாரும் பழவினைக்கு நிழலையே உவமை கூறுகின்றனர். மனத்தின் நினைத்ததே கொடுக்கும் பாலவாகிய கறவை என்க. அது காமதேனு.

( 279 )
2878 நெடுமணி யூபத் திட்ட
  தவழ்நடை யாமை நீணீர்த்
தொடுமணிக் குவளைப் பட்டந்
  துணையொடு நினைப்ப தேபோற்
கடுமணிக் கயற்க ணல்லார்
  காமமும் பொருளுஞ் சிந்தித்
தடுமணி யாவி நீப்பா
  ரறிவினாற் சிறிய நீரார்.

   (இ - ள்.) நெடுமணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை - நீண்ட அழகிய வேள்வித் தூணிலே கட்டப்பட்ட தவழும் நடையுடைய யாமையானது; நீள்நீர்த் தொடுமணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதேபோல் - தான் கிடந்த மிகு நீரையுடைய, தோண்டப்பட்ட, மணியையும் குவளையுமுடைய பொய்கையையும் துணையையும் நினைப்பதைப்போல; அறிவினால் சிறிய நீரார் - அறிவிலே சிறுமையுற்ற இயல்பினார்; கடுமணிக் கயற்கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து - கொடிய அழகிய கயலைப்போன்ற கண்களையுடைய நல்லாரின்