| முத்தி இலம்பகம் |
1626 |
|
|
|
காமத்தையும் பொருளையும் எண்ணி; அடும் மணி ஆவி நீப்பார் - அராவிய மணிபோன்று சிறந்த உயிரைப் (பாழே) போக்குவர்.
|
|
(வி - ம்.) ‘அழலெழு தித்திய மடுத்த யாமை - நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாங்கு‘ (361) என்றார் அகத்திலும்.
|
|
மணி - அழகு, மணிக்குவளை : உவமத்தொகை - கடுங் கண், மணிக்கயற்கண் என இயைக்க, மணிக்கயல்-அழகிய கயல்மீன். மணி ஆவி நீப்பார் என்றது, வீடு பெறுதற்குரிய மணியுயிரைப் பாழே போக்குவர் என்றவாறு. அடுமணி - அராவிய மணி என்க.
|
( 280 ) |
| 2879 |
வீறழி வினைசெய் காலன் | |
| |
வைரவாள் வலையிற் பட்டாற் | |
| |
சாறழி குவளை மாலை | |
| |
யவரையுந் தனமு நீக்கி | |
| |
யாறிழி வரையிற் றோன்று | |
| |
மறநனி நினைப்பர் செம்பொ | |
| |
னேறெழி னெறியி னேறி | |
| |
யிருவிசும் பாளு நீரார். | |
|
|
(இ - ள்.) செம்பொன் ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார் - செவ்விய பொன் சிறந்த அழகிய நெற்றிலே சென்று பெரிய வானுலகை ஆளும் இயல்பினார்; வீறு அழி வினைசெய் காலன் வயிராவாள் வலையில் பட்டால் - கொலைவினை செய்கின்ற காலனுடைய வயிர வாள்போலே கொல்லும் வலையில் அகப்பட்டால்; சாறு அழி தனமும் குவளைமாலையவரையும் நீக்கி - விழாக் கொண்டாடுதலால் மிக்க பொருளையும் குவளை மாலையணிந்த மகளிரையும் விட்டு; ஆறிழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் - ஆறுகள் தோன்றி யிழிகின்ற மலைபோலத் தோன்றும் அறத்தை மிகவும் நினைப்பர்.
|
|
(வி - ம்.) வீறழிந்த வினை : கொலைத்தொழில், பலகாலும் வெட்டினாலுங் கேடு இன்று என்பதனை நினைக்க ‘வைரவாள் ‘ என்றார். வலை : பிறப்பு. ‘ஆறழிகின்றவரை‘ என்றார் பயன்படுதலும் நிலைகுலையாமையும் நோக்கி. நெறி - தவம் ‘செம்பொன் நீரார்‘ என இயைத்துச் ‘சுவர்க்கத்தே செல்லும் பொன்னாகிய உயிரினையுடையார்‘ என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 281 ) |
| 2880 |
துன்னிமற் றறத்தைக் கேட்டே | |
| |
துகினெருப் புற்ற தேபொன் | |
| |
மின்னுத்தார் மார்பன் மெய்வெந் | |
| |
தாலியி னுருகிப் பெண்பா | |
| |
லன்னப்பார்ப் பன்று கொண்ட | |
| |
தடத்திடை விடுவித் திட்டான் | |
| |
பின்னைத்தன் கிளைகள் கூட்டம் | |
| |
பெருந்தகை வித்தி னானே. | |
|