பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1627 

 

   (இ - ள்.) மின்னுத்தார் மார்பன் - மின்னுப்போலும் தாரை உடைய மார்பன்; அறத்தைத் துன்னிக்கேட்டு - (இவ்வாறு) அறத்தைப் பொருந்திக் கேட்டு (அஞ்சி); துகில் நெருப்பு உற்றதேபோல் - உடுத்த துகிலிலே நெருப்புற்றதைப்போல; மெய் வெந்து - உடல் வெதும்பி; ஆலியின் உருகி - ஆலங்கட்டி போல உருகி; பெண்பால் அன்னப் பார்ப்பு - பெண்பாலிடமிருந்த அன்னப் பார்ப்பை; விடுவித்து அன்று கொண்ட தடத்திடை இட்டான் - நீக்கி அன்றுகொண்ட பொய்கையிலே போகவிட்டான்; பின்னைத் தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தினான் - பிறகு, அப்பார்ப்பின் உறவுடன் கூடுதலுக்கும் அப்பெருந்தகை வழி செய்தான்.

   (வி - ம்.) ‘பின்னைத் தன் கிளைகள் கூட்டம் வித்தினான்‘ என்பதற்கு, ‘முன்னர்க்கிளைப் பிரிவை வித்தியதேயன்றிப் பின்னர்க் கிளைகளிடத்துக் கூட்டத்தையும் வித்தினான்‘ என்று பொருள்கூறி, ‘இக்காரணத்தாலே விசயையை நீங்கிச் சுநந்தையிடத்தே வளர்ந்தானென்றும், பின்னர் அவளைச் சேர்ந்தான் என்றும் முன்னர்க் கூறினார்‘ என்று விளக்கங் கூறுவர்.

( 282 )
2881 மெய்ப்படு முதுபுண் டீர்ப்பான்
  மேவிய முயற்சி போல
வொப்புடைக் காமந் தன்னை
  யுவர்ப்பினோ டொழித்துப் பாவ
மிப்படித் திதுவென் றஞ்சிப்
  பிறவிநோய் வெருவி னாலே
மைப்படு மழைக்க ணல்லார்
  வாய்க்கொண்ட வமுத மொப்பான்.

   (இ - ள்.) மைப்படும் மழைக்கண் நல்லார் வாய்க்கொண்ட அமுதம் ஒப்பான் - மை தீட்டிய மழைக்கண் மங்கையர் வாய்க்கொண்ட அமுதம்போல அவர் நினைத்த தன்மையனாக இருந்தவன்; மெய்ப்படும் முதுபுண் தீர்ப்பான் மேவிய முயற்சிபோல - உடம்பிற்கண்ட பழம் புண்ணைத் தீர்ப்பதற்குக் கைக்கொண்ட முயற்சிபோல; ஒப்புடைக் காமந்தன்னை உவர்ப்பினோடு ஒழித்து - (தன் இளமைக்கு) ஒப்புடைய காமத்தை வெறுப்பினால் ஒழித்து; பாவம் இது இப்படித்து என்று அஞ்சி