|  முத்தி இலம்பகம் | 
 1628  | 
 | 
  | 
| 
 பாவத்தையும் இது இவ்வாறு பெரியதாந் தன்மையுடையது என்றும் அஞ்சி; பிறவி நோய் வெருவினான் - (இவற்றை யெல்லாமுடைய) பிறவிப் பிணியை எண்ணி அஞ்சினான். 
 | 
| 
    (வி - ம்.) முது புண் : ஒடு என்பர். 
 | 
| 
    முதுபுண் என்பதற்கு ஒடு என்றனர் நச்சினார்க்கினியர். தீர்ப்பான் : வினையெச்சம். தன்னிளைமையோடு ஒப்புடைய காமம். உவர்ப்பு - வெறுப்பு. இப்படித்து - இத்தன்மைத்து என்றவாறு. இவற்றையெல்லாம் உடைய பிறவிநோய் என்பதுபடநின்றது. அவனது இளமையைத் தெரித்தோதுவர் ‘நல்லார் வாய்க்கொண்ட அமுதமொப் பான்‘, என்றார். 
 | 
 ( 283 ) | 
|  2882 | 
ஆளியாற் பாயப் பட்ட |   |  
|   | 
  வடுகளி யானை போல |   |  
|   | 
வாளிவிற் றடக்கை மைந்தன் |   |  
|   | 
  வாய்விட்டுப் புலம்பிக் காம |   |  
|   | 
நாளினு நஞ்சு துய்த்தே |   |  
|   | 
  னச்சறை யாக நன்பொற் |   |  
|   | 
றோளியர்த் துறந்து தூய்தாத் |   |  
|   | 
  தவஞ்செய்வ லடிக ளென்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆளியால் பாயப்பட்ட அடுகளி யானைபோல - ஆளியென்னும் விலங்காற் பாயப்பட்ட, கொல்லும் மதமுடைய யானையைப்போல; வாளி வில் தடக்கை மைந்தன் வாய்விட்டுப் புலம்பி - அம்பையுடைய வில்லேந்திய நீண்ட கையானாகிய யசோதரன் வாய்விட்டழுது; நஞ்சு அறையாகக் காம நஞ்சு நாளினும் துய்த்தேன் - நஞ்சிற்கு ஓர் இருப்பிடமாகக் காமமாகிய நஞ்சினை நாள்தோறும் நுகர்ந்தேன்; அடிகள்! - அடிகளே!; நன் பொன் தோளியர்த் துறந்து தூய்து ஆ தவம் செய்வல் என்றான் - அழகிய பொன்னணி புனைந்த தோளியரை நீங்கித் தூயதாகத் தவத்தைச் செய்வேன் என்றான். 
 | 
| 
    (வி - ம்.) ‘துய்த்தேன் என்று யானை போலப் புலம்பித் தவஞ் செய்வல் அடிகள் என்றான்‘ எனக்கூட்டுவர் நச்சினார்க்கினியர். தவஞ்செய்தலே தன்கருமமாதலின் தவஞ்செய்வல் எனத் துணிந்தனன் என்பதாம். 
 | 
 ( 284 ) | 
|  2883 | 
சிறுவன்வாய் மொழியைக் கேட்டே |   |  
|   | 
  தோ்மன்னன் றானுஞ் சொன்னா |   |  
|   | 
னுறுகளிற் றுழவ மற்றுன் |   |  
|   | 
  னொளிமுடித் தாய மெய்தி |   |  
|   | 
 
 
 |