பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1630 

   (வி - ம்.) தொல்லை : தொலை என விகாரப்பட்டதென்பர் நச்சினார்க்கினியர்.

   விலைப்பெருமணி அசோதரனுக்கும் கடல் துறவுக்கும் மணியை வீழ்த்தோர் பவணமாதேவனுக்கும் உவமைகள். “ஓங்கிய நன்மணி உறுகடல் வீழ்த்தோர்“ (சிலப். 30 : 30) என்றும் “மாமணி ஓங்கு திரைப் பெருங்கடல் வீழ்த்தோர்“ (மணிமே. 2 : 72 - 3) என்றும் பிற சான்றோரும் ஓதுதல் காண்க.

( 286 )
2885 காதல மல்ல மேனாட் கழிந்தநம் பிறவி தம்மு
ளேதிலம் யாங்க ளெல்லா மினிக்கொளு முடம்பினானு
மாதலாற் சுற்ற மில்லை யதுபட்ட வாறென் றம்பூந்
தாதலர் மார்ப னற்புத் தளையறப் பரிந்திட் டானே.

   (இ - ள்.) மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள் யாங்கள் எல்லாம் காதலம் அல்லம் - முன்னர்க் கழிந்த நாளில் நம் பிறவிகளில் யாங்கள் எல்லோரும் இவற்குச் சுற்றம் அல்லோம்; இனிக் கொளும் உடம்பினானும் ஏதிலம் - இனிப் பிறக்கும் பிறவிகளினும் சுற்றம் ஆகேம்; ஆதலால் சுற்றம் இல்லை - ஆதலால், ஈண்டுச் சுற்றம் என்பது ஒன்றில்லை; பட்ட ஆறு அது என்று - இவற்குப் பட்டதும் அது என்று கருதி; அம் பூந்தாது அலர் மார்பன் அற்புத்தளை அறப் பரிந்திட்டான் - அழகிய மலர்த்தாது கொண்ட மலர்மார்பன் அன்பாகிய தளை போம்படி அறுத்துக்கொண்டான்.

   (வி - ம்.) தாய் முதற் சுற்றமெல்லாங்கூட்டி. ‘யாங்கள் எல்லாம்‘ என்றான். ‘அது‘ என்றது தான் கருதிய கருத்தை.

( 287 )
2886 நற்பொறி குயிற்றி வல்லான்
  செய்ததோர் நன்பொற் பாவை
பொற்பொறி கழல வெல்லாப்
  பொறிகளுங் கழல்வ தேபோற்
சொற்பொறி சோர வெல்லாப்
  பொறிகளுஞ் சோர்ந்து நம்ப
னிற்பொறி யின்ப நீக்கி
  யிராயிரர் சூழச் சென்றான்.

   (இ - ள்.) நல் பொறி குயிற்றி - நடத்துதற்கு உரிய நல்ல பொறியை உள்ளே வகுத்து; வல்லான் செய்தது ஓர் நன் பொன்பாவை - வல்லவன் இயற்றியதாகிய ஒரு நல்ல பொற்பாவை; பொன் பொறி கழல - அந்த நல்ல பொறி குலைய; எல்லாப் பொறிகளும் கழல்வதேபோல் - (அதனால்) எல்லாப் பொறிகளும் குலைதல் போல; சொல் பொறி சோர - அரசனுடைய சொல