|  முத்தி இலம்பகம் | 
 1632  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ்தாரினானும் - அகிற்புகை நிறைந்து தெய்வத்தன்மை மணக்கும் வண்டுமுரலும் மாலையனாகிய பவணமாதேவனும்; தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதித்திருவும் - ஒளி நிறைந்த மாலையணிந்த ஐம்பாலையுடைய சயமதியாகிய திருவனையாளும்; ஆர்ந்த காமம் மாசு உண்ட காதல் கதிர்வளைத் தோளினாரும் - நுகர்ந்த காமமாகிய மாசிலே தழும்பிய, காதலூடடும் ஒளிமிகும் வளையணிந்த தோளினாராகிய யசோதரன் மனைவியரும்; நாமம் நால் கதியும் அஞ்சி - அச்சந்தரும் நால்வகைப் பிறப்பிலும் சேறற்கு அஞ்சி; நல் தவத்து உச்சி கொண்டார் - நல்ல தவத்தின் முடிவைக் கொண்டனர். 
 | 
| 
    (வி - ம்.) தூமம் - நறுமணப்புகை. சுரும்பு - வண்டு. தாரினான் என்றது பவணமாதேவனை ஒலியல் - மாலை. சயமதியாகிய திரு என்க. காமமாகிய மாசிலே தழும்பிய தோளினார் என்க. தோளினார் என்றது யசோதரன் தேவிமாரை. 
 | 
 ( 290 ) | 
வேறு
 | 
|  2889 | 
ஆசார நாணத் தவஞ்செய் தலர்க் கற்ப கத்தார்ச் |   |  
|   | 
சாசார னென்னுந் தகைசாலொளித் தேவர் கோவாய் |   |  
|   | 
மாசார மாய மணிவானுல காண்டு வந்தாய் |   |  
|   | 
தூசார்ந்த வல்குற் றுளும்புந்நலந் தாரொ டென்றான். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆசாரம் நாணத் தவம் செய்து - (யசோதரனா கிய நீ அவ்வாறு) தவத்திற்குக் கூறிய ஒழுக்கம் நாணும்படி தவம் புரிந்து; அலர்க் கற்பகத்தார் சாசாரன் என்னும் தகைசால் ஒளித்தேவர் கோவாய் - அலர்ந்த கற்பகமாலையணிந்த சகஸ்காரன் என்னும் பெருமை சான்ற ஒளியையுடைய வானவர் தலைவனாய்; மாசாரம் ஆய மணிவான் உலகு ஆண்டு - பெரு நன்மையுடைய மணிகள் நிறைந்த வானுலகை ஆண்டு; தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு - ஆடை சூழ்ந்த அல்குலையும் ததும்பும் அழகையும் உடைய மனைவியருடன்; வந்தாய் என்றான் - இவ்வுலகிலே இப்பிறவியில் வந்தாய் என்று கூறினான். 
 | 
| 
    (வி - ம்.) வந்தாய் என்றது சீவகனாகப் பிறந்ததை. வானவருல கின்கண் நுகரும் இன்பமும் யான் நுகரப்பெற்றிலேன் என்னும் அவர் நீங்கினால் அன்றி ஈண்டு வீடு பெறுதல் இன்றென்பது உணர்த்தற்கு இந்திரனாகி வந்தாய் என்றான், எனவே எல்லா அவாவும் அற்றது வீடு ஆயிற்று. முற்பிறப்பில் மனைவியரானவரே இப்பிறப்பிலும் மனைவியராக வந்தார் என்று ஈண்டுச் சாரணர் கூறுதலின், முன்னர்க் கனவில், ‘எண் முத்தணிமாலை‘ (சீவக. 223) தூங்கக் கண்டாள் என்றுணர்க. 
 | 
 ( 291 ) |