| முத்தி இலம்பகம் |
1637 |
|
|
வேறு
|
| 2897 |
வெள்ளெயிற் றரவு மேய்ந்த | |
| |
மிச்சிலின் மெலிந்து மேகப் | |
| |
புள்வயிற் பிறந்த புட்போ | |
| |
லொன்றலா துரைத்த றேற்றார் | |
| |
கள்வயிற் றலர்ந்த கோதைக் | |
| |
கலாபவில் லுமிழு மல்கு | |
| |
லொள்ளெயிற் றவர்கள் பொன்பூத் | |
| |
தொளிமணி யுருவ நீத்தார். | |
|
|
(இ - ள்.) மேகப் புள்வயின் பிறந்த புள்போல் - வானம்பாடி முகிலிடத்துப் பிறந்த துளியையே விரும்பிப் பாடுமாறு போல; ஒன்று அலாது உரைத்தல் தேற்றார் - அரசன் உள்வயின் பிறந்த அளியொன்றும் அல்லாதவற்றை உரைத்தலறியாதவர்களாகிய; கள் வயிற்று அலர்ந்த கோதை - தேனை வயிற்றிலே மலர்ந்த மாலையினையும்; கலாப வில் உமிழும் அல்குல் - கலாபத்தின் ஒளி உமிழப்பெற்ற அல்குலையும்; ஒள் எயிற்றவர்கள் - ஒளி பொருந்திய முறுவலையும் உடைய அரசியர்; வெள்எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து - வெண்மையான பற்களையுடைய பாம்பினால் உண்ணப்பட்ட திங்கள் போல ஒளி கெட்டு; பொன் பூத்து - பசந்து; ஒளி மணி உருவம் நீத்தார் - ஒளியையுடைய மணிகளின் உருவைக் கைவிட்டார்.
|
|
(வி - ம்.) மேகப்புள் - வானம்பாடி.
|
|
அரவு மேய்ந்த மிச்சில் என்றது - பாம்பால் விழுங்கப்பட்டு ஒளி மங்கிய திங்களை. மேகப்புள் - வானம்பாடி, மேகப்புள் அம்மேகத்து வயிற்பிறந்த ஒன்றலாது உரைத்தல் தேற்றாதன்றே அப்புள்போல அரசனிடத்துப் பிறந்த ஒன்றலாது உரைத்தல் தேற்றார் என்பது கருத்தாகக் கொள்க. மேகத்துப் பிறந்த ஒன்றென்றது துளியை; அரசனிடத்துப் பிறந்த ஒன்றென்றது அன்பினை என்க.
|
( 299 ) |
| 2898 |
கிளிச்சொலி னினிய சொல்லார் | |
| |
கிண்கிணி சிலம்பொ டேங்கக் | |
| |
குளித்துநீ ரிரண்டு கோலக் | |
| |
கொழுங்கயல் பிறழ்ப வேபோற் | |
| |
களித்துநீர் சுமந்து வாட்கண் | |
| |
கலாஅய்ப்பிறழ்ந் தலமந் தாட | |
| |
வளித்ததா ரலங்க லாழி | |
| |
யவன்றுற வுரைத்து மன்றே. | |
|