பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1642 

   (இ - ள்.) கழுமணி ஆரம் மார்பின் காவலன் - கழுவிய மணி மாலையணிந்த மார்பினையுடைய அரசன்; காய் பொன்எழு வளர்ந்த அனைய திண்தோள் மக்கள் இளையவர் தம்முள் - காய்ந்த பொன்னணி புனைந்த எழு வளர்ந்தாற் போன்ற திண் தோளையுடைய மக்களாகிய இளைஞர்களில்; தழு மலர்க் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த மூத்த நம்பி - முழுவதும் மலரையுடைய கொம்புபோன்ற தத்தை முதல் நாள் பெற்ற மூத்த நம்பியாகிய; விழுமணிப் பூணினானை - சிறந்த மணிப்பூண் புனைந்த சச்சந்தனை, வீற்றிரீஇ விதியின் சொன்னான் - வீற்றிருத்தி நூல் முறைப்படி யுரைத்தான்.

   (வி - ம்.) கழுமணி : வினைத்தொகை. மேல் முடிசூட்டி வீற்றிருத்துவதனை வீற்றிரீஇயனெ இறந்த காலத்தாற் கூறினார். இயற்கை பற்றி.

( 307 )
2906 பால்வளை பரந்து மேயும்
  படுகடல் வளாக மெல்லாங்
கோல்வளை யாமற் காத்துன்
  குடைநிழற் றுஞ்ச நோக்கி
நூல்விளைந் தனைய நுண்சொற்
  புலவரோ டறத்தை யோம்பின்
மேல்விளை யாத வின்பம்
   வேந்தமற் றில்லை கண்டாய்.

   (இ - ள்.) வேந்த! - அரசனே!; பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம் - வெண்ணிறச் சங்குகள் பரவி மேயும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பையெல்லாம்; நின்குடை நிழல் துஞ்சநோக்கி - நின் குடையின் கீழே தங்கும்படி பார்த்து; கோல் வளையாமல் காத்து - அவ் வுலகைச் செங்கோலாற் காப்பாற்றி; நூல் விளைந்த அனை நுண்சொல் புலவரோடு - நூல்கள் பயன் தந்தாற்போலும் நுண்ணிய சொற்களையுடைய அமைச்சருடன்; அறத்தை ஓம்பின் - அறத்தையும் காக்க வல்லையாயின; மேல் விளையாத இன்பம் மற்று இல்லை கண்டாய் - நினக்கு மேல் உண்டாகாத இன்பம் வேறில்லை காண்.

   (வி - ம்.) ‘வேந்த! - என்றான்!; மேல் முடிசூட்டக் கருதுதலின். புலவர் - அமைச்சர். ‘அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர்‘ (புறநா. 235)

( 308 )
2907 வாய்ப்படுங் கேடு மின்றாம்
  வரிசையி னரிந்து நாளுங்
காய்த்தநெற் கவளந் தீற்றிற்
  களிறுதான் கழனி மேயின்