| முத்தி இலம்பகம் | 
1644  | 
 | 
  | 
| 
 உயிரல்ல; நாம வேல் நம்பி! - அச்சந்தரும் வேலையுடைய நம்பியே! ;  ஞாலந்தன்னுள் நல் உயிர் - உலகிலே சிறந்த உயிர் ; புகைந்து பொங்கும் முழங்கு அழல் இலங்குவாள் கை - புகைந்து பொங்கி யெரியும் ஒலியுடைய தீயில் தோய்ந்து விளங்கும் வாளேந்திய கையையும்; மல்லல் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் - வளமிகும் யானையையும் மாலை புனைந்த வெண்குடையையும் உடைய மன்னரே காண். 
 | 
| 
    (வி - ம்.) ”நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே 
 | 
| மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் | 
 | 
| அதனால், யானுயி ரென்ப தறிகை | 
 | 
| வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.” | 
 | 
| 
    (புறநா. 186) 
 | 
( 310 ) | 
|  2909 | 
ஆர்வலஞ் சூழ்ந்த வாழி யலைமணித் தேரை வல்லா |   |  
|   | 
னோ்நிலத் தூருமாயி னீடுபல் காலஞ் செல்லு |   |  
|   | 
மூர்நில மறித றேற்றா தூருமேன் முறிந்து வீழுந் |   |  
|   | 
தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தார் நிலம் மார்ப! - மாலைக்கு இடமான மார்பனே!; ஆர்வலம் சூழ்ந்த ஆழி அலை மணித்தேரை - ஆரை இடமாகக்கொண்டு வளைந்த ஆழியை உடைய, அலைகின்ற மணி கட்டிய தேரை; வல்லான் நேர் நிலத்து ஊரும் ஆயின் - தேரூர வல்லவன் ஒத்த நிலத்திலே செலுத்துவானாயின்; நீடு பல் காலம் செல்லும் - மிகப்பல காலம் அத்தேர் நடக்கும்; ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் - தான் செலுத்தும் இடம் தெரியாமற் செலுத்துவானாயின் அதுவும் முறிந்து தானும்விழுவான்; வேந்தர் தன்மையும் அன்னது ஆம் - அரசரியல்பும் அத்தன்மையேயாம். 
 | 
| 
    (வி - ம்.) என்றது, வேந்தர் அரசை ஆளும் முறையில் ஆளின் அது நீடு நடக்கும்; அவ்வாறு ஆளாராயின், அதுவுங் கெட்டுத் தாமும் வீழ்வார் என்றான். 
 | 
( 311 ) | 
|  2910 | 
காய்ந்தெறி கடுங்கற் றன்னைக் |   |  
|   | 
  கவுட்கொண்ட களிறு போல |   |  
|   | 
வாய்ந்தறி வுடைய ராகி |   |  
|   | 
  யருளொடு வெகுளி மாற்றி |   |  
|   | 
வேந்தர்தாம் விழைப வெல்லாம் |   |  
|   | 
  வெளிப்படார் மறைத்தல் கண்டாய் |   |  
|   | 
நாந்தக வுழவ ரேறே |   |  
|   | 
   நன்பொரு ளாவ தென்றான். |   | 
 
 
 |