பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1648 

   மரபு. 83) என்னுஞ் சூத்திரத்தால் மன்பெறு மரபி னேனோர்க்கு முடி கூறாமையானும், 'அந்தணாளர்க்கரசு வரைவின்றே' (தொல். மரபு. 82) என்னுஞ் சூத்திரத்தான் அரசு இல்வழி அந்தணரை, அரசியல் பூண்பரென்றைமையானும், நந்தட்டன் புதல்வனை முடிசூட்டினானென்றல் பொருந்தாமையுணர்க.”

( 316 )
2915 நிலஞ்செதி ளெடுக்கு மான்றோ்
  நித்திலம் விளைந்து முற்றி
நலஞ்செய்த வைரக் கோட்ட
  நாறுமும் மதத்த நாகங்
குலஞ்செய்த குமரர்க் கெல்லாம்
  கொடுத்தன னிதியு நாடு
முலஞ்செய்த வைரக் குன்ற
  மோரிரண்ட டனைய தோளான்.

   (இ - ள்.) உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான் - கல்லாற் செய்த வைரம் பொருந்திய மலை இரண்டு போன்ற தோளையுடைய சீவகன்; நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் - நிலத்தைத் தூளி செய்யும் குதிரை பூட்டிய தேர்களையும்; நித்திலம் விளைந்து முற்றி நலம் செய்த வைரக்கோட்ட நாறும் மும்மதத்த நாகம் - முத்து விளைந்து முற்றி அழகு செய்த வைரக் கிம்புரியுடைய கோட்டினையுடைய நாறும் மும்மதமுடைய யானைகளையும்; நிதியும் நாடும் - நிதியையும் நாடுகளையும்; குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன்- குலத்தை விளக்கும் மற்றைய மக்கட்கெல்லாம் கொடுத்தான்.

   (வி - ம்.) 'திறம் செய்து' என்று பாடமாயின் ('குலம் செய்த' என்பதற்குப் பிரதியாக) கூறுபடுத்தி என்க.

( 317 )
2916 நூற்கிடங் கொடுத்த கேள்வி
  நுண்செவி மண்கொண் ஞாட்பில்
வேற்கிடங் கொடுத்த மார்பின்
  வில்வலான் றோழர் மக்க
ணாற்கடல் வளாகங் காக்கு
  நம்பிதன் கண்க ளாகப்
பாற்கடற் கேள்வி யாரைப்
  பழிப்பற நாட்டி னானே.

   (இ - ள்.) நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண்செவி - நூலுக்கு இருப்பிடமாகிய கேள்வியையுடைய நுண்ணிய செவியையும்; மண்கொள் ஞாட்பில் வேற்கு இடம் கொடுத்த