| முத்தி இலம்பகம் |
1651 |
|
|
|
(இ - ள்.) நெடிய தாமத்திடை - நீண்ட இவ்வகைத் தாமங்களினிடையில்; மூன்று உலகும் விற்கும் முற்றிழை முலையினார் - மூவுலகையும் விலைகொண்ட நிறைந்த அணிகலன்களையுடைய முலையினாராகிய அரசியர்; ஈன்ற மயில்போல் - கருவீன்ற மயில்களைப்போல்; எங்கும் மான்று மணம் விம்மு புகைமல்கி - எங்கும் கலந்து மணம் பொங்கும் நறும்புகை நிறைந்து; மணிகால் அமளி - மணிகளிழைத்த கால்களையுடைய கட்டிலின்மேல்; நுரையே போல் தோன்றும் - பால்நுரை போன்று தோன்றுகிற; தூ அணையின் மேலார் - தூய பஞ்சணையின்மேல் இருந்தனர்.
|
|
(வி - ம்.) அரசன் ஏவலர் அழைக்கச் சென்றபோது அரசியார் இருந்த நிலை கூறினார். தாமங்களினிடையே அமளியில் அணையின்மேல் இருந்தனர்.
|
( 322 ) |
| 2921 |
இன்னதரு ளென்றிளைய ரேத்தஞிமி றார்ப்ப | |
| |
மின்னினிடை நோவமிளிர் மேகலைகண் மின்னப் | |
| |
பொன்னரிய கிண்கிணியும் பூஞ்சிலம்பு மேங்க | |
| |
மன்னனடி சோ்ந்திறைஞ்சி வாழியென நின்றார். | |
| |
|
|
(இ - ள்.) இளையர் இன்னது அருள் என்று ஏத்த - (அப்போது சென்ற) ஏவலர் இஃது அரசன் திருவுள்ளம் என்றுகூறி வாழ்த்த; ஞிமிறு ஆர்ப்ப - வண்டுகள் முரல; மின்னின் இடைநோவ - மின்போன்ற இடை வருந்த; மிளிர் மேகலைகள் மின்ன - விளங்கும் மேகலைகள் ஒளிர; பொன் அரிய கிண்கிணியும் பூஞ்சிலம்பும் ஏங்க - பொன்னாற் செய்த அரிய கிண்கிணிகளும் அழகிய சிலம்புகளும் ஒலிக்க; சேர்ந்து மன்னன் அடி இறைஞ்சி - சென்று அரசன் திருவடியை வணங்கி; வாழி என நின்றார் - வாழி என்று கூறி நின்றனர்.
|
|
(வி - ம்.) இளையர் - ஈண்டு ஏவலிளையார். ஞிமிறு - வண்டு. பூஞ்சிம்பு - அழகிய சிலம்பு. மன்னன் : சீவகன்.
|
( 323 ) |
| 2922 |
கலவமயில் கால்குவித்த போலுங்கம ழைம்பா | |
| |
னிலவுமணி மேகலைநி லாவுமிழும் பைம்பூ | |
| |
ணிலவமலர் வாயினணி கூரெயிற்றி னீரே | |
| |
யுலவுமனம் வைத்துறுதி கேண்மினமி தென்றான். | |
| |
|
|
(இ - ள்.) மயில் கலவம் கால் குவித்தாற்போலும் கமழ் ஐம்பால் - மயில் கலாபத்தைக் குவித்தாற்போலும் மணமுறு கூந்தலையும்; நிலவும் மணிமேகலை - விளங்கும் மணிகள் இழைத்த மேகலையையும்; நிலா உமிழும் பைம்பூண் - நிலவைச் சொரியும் புத்தணிகளையும்; இலவ மலர் வாயின் - இலவ மலர்போலும் வாயினையும்; அணிகூர் எயிற்றினீரே! -அழகிய கூரிய பற்களை
|