| முத்தி இலம்பகம் |
1652 |
|
|
|
யும் உடையீரே!; உலவும் மனம் வைத்து - இன்பத்திலே உலவும் மனத்தை ஒருமைப்படுத்தி; உறுதி இது கேண்மின் என்றான் - நலந்தருவதாகிய இதனைக் கேண்மின் என்றான்.
|
|
(வி - ம்.) கேண்மினம் : அம் : அசை.
|
|
கலவம் - கலாபம் : தோகை. கால் குவித்தல் - குவித்தல் என்னும் ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது. மயில் கலாபம்போலும் ஐம்பால் என்றவாறு. உலவு மனத்தை ஒருவழிப்படுத்துக் கேண்மின் என்றவாறு.
|
( 324 ) |
வேறு
|
| 2923 |
வாயழ லுயிர்க்கு மாழி | |
| |
மன்னவன் குறிப்பு நோக்கி | |
| |
வேயழத் திரண்ட மென்றோள் | |
| |
வெம்முலைப் பரவை யல்குற் | |
| |
றோய்பிழி யலங்க லார்தந் | |
| |
தொன்னலந் தொலைந்து வாடிக் | |
| |
காயழற் கொடியைச் சோ்ந்த | |
| |
கற்பக மாலை யொத்தார். | |
|
|
(இ - ள்.) வேய் அழத் திரண்ட மென்தோள் - மூங்கில் வருந்தத் திரண்ட மெல்லிய தோளையும்; வெம்முலை - விருப்பூட்டும் முலையையும்; பரவை அல்குல் - பரப்புறும் அல்குலையும்; தோய்பிழி அலங்கலார் - செறிந்த மதுவையுடைய மாலையையும் உடைய அரசியார்; வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி - வாயில் நெருப்பைச் சிந்தும் ஆழியை ஏந்திய அரசன் குறிப்பைப் பார்த்து; தம் தொல்நலம் தொலைந்து வாடி - தம் பழமையான அழகு கெட்டுச் சோர்ந்து; காய் அழல் கொடியைச் சேர்ந்த கற்பக மாலை ஒத்தார் - சுடும் நெருப்பொழுங்கைச் சேர்ந்த கற்பக மாலையைப் போன்றனர்.
|
|
(வி - ம்.) ஆழி - சக்கரப்படை. மன்னவன் : சீவகன். குறிப்பு - துறக்குங் கருத்து. அலங்கலார் - ஈண்டு மனைவிமார். நலம் - அழகு. அழற்கொடி - தீயொழுங்கு.
|
( 325 ) |
| 2924 |
கருங்கடற் பிறப்பி னல்லால் | |
| |
வலம்புரி காணுங் காலைப் | |
| |
பெருங்குளத் தென்றுந் தோன்றா | |
| |
பிறைநுதற் பிணைய னீரே. | |
| |
|