பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1653 

2924 யருங்கொடைத் தான மாய்ந்த
  வருந்தவந் தெரியின் மண்மேன்
மருங்குடை யவர்கட் கல்லான்
  மற்றையர்க் காவ துண்டே.

   (இ - ள்.) பிறைநுதல் பிணை அனீரே! - பிறை போன்ற நுதலையும் மான் போன்ற பார்வையையும் உடையீரே!; காணுங்காலை - ஆராயுமிடத்து; வலம்புரி கருங்கடல் பிறப்பின் அல்லால் - வலம்புரிகள் கரிய கடலிலே பிறப்பதன்றி; பெருங்குளத்து என்றும் தோன்றா - பெரிய குளத்திலே எப்போதும் பிறவா; தெரியின் - ஆராயின் (அவ்வாறே); அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் - அரிய கொடையாகிய தானமும் தெளிந்த அரிய தவமும்; மண்மேல் மருங்கு உடையவர்கட்கு அல்லால் - உலகிற் செல்வமுடையவர் கட்கல்லாமல்; மற்றையர்க்கு ஆவது உண்டே? - வறியவர்கட்கு உண்டாம் தன்மை யில்லை.

   (வி - ம்.) அருங்கொடைத் தானம் - உத்தம தானம்.

   பற்றறுத்தற்கு நுகர்ச்சி அறிவே காரணமாதலன்றி வறுமை காரணமாகாது என்பது இச்செய்யுளின் கருத்து.

( 326 )
2925 விட்டுநீர் வினவிக் கேண்மின்
  விழுத்தகை யவர்க ளல்லாற்
பட்டது பகுத்துண் பாரிப்
  பார்மிசை யில்லை கண்டீர்.
அட்டுநீ ரருவிக் குன்றத்
  தல்லது வைரந் தோன்றா
குட்டநீர்க் குளத்தி னல்லாற்
  குப்பைமேற் குவளை பூவா

   (இ - ள்.) நீர் விட்டு வினவிக் கேண்மின் - நீர் வெளிப்படுத்தி யான் கூறும் இதனைக் கேட்பீராக; அட்டு நீர் அருவிக் குன்றத்து அல்லது வைரம் தோன்றா - சொரிகின்ற நீரருவியை உடைய குன்றிலன்றி வைரங்கள் தோன்றா; குட்டம் நீர்க்குளத்தின் அல்லால் குப்பைமேல் குவளை பூவா - ஆழமான நீர்நிறைந்த குளத்திலே அல்லாமற் குப்பைமேற் குவளைகள் மலரா; இப் பார்மிசை - இவ்வுலகிலே; விழுத்தகையவர்கள் அல்லால் - சிறந்த பண்புடையவர்கள் அல்லாமல்; பட்டது பகுத்து உண்பார் இல்லை - கிடைத்ததைப் பங்கிட்டு நல்கி உண்பவர் இல்லை.

   (வி - ம்.) கண்டீர் : முன்னிலை அசை.