| முத்தி இலம்பகம் | 
1663  | 
 | 
  | 
| 
 பொழிந்து வீழ்ந்த - மலர் அசையும் மார்பிலே பெய்யப்பட்டு வீழ்ந்தன. 
 | 
| 
    (வி - ம்.) கழிந்தநாள் காதலம் என மாறுக. இதனின் இப்புறம் என்றது அறவுரையைக் கேட்டதற்கு இப்பால் என்றவாறு. மாதரார் - ஈண்டுக் காந்தருவதத்தை முதலியோர். 
 | 
( 345 ) | 
வேறு
 | 
|  2944 | 
செருக்கி நிணந்தின்று சிவந்து |   |  
|   | 
  மன்ன ருயிர்செற்ற |   |  
|   | 
நெருப்புத் தலைநெடுவேற் கண்ணார் |   |  
|   | 
  கண்ணீர் நிழன்மணிப்பூட் |   |  
|   | 
பரப்பி னிடைப்பாய்ந்து குளமாய்ப் |   |  
|   | 
  பாலார் படாமுலையை |   |  
|   | 
வருத்தி மணிநெடுங்கோட் டருவி |   |  
|   | 
  போல வீழ்ந்தனவே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நிணம் தின்று செருக்கிச் சிவந்து மன்னர் உயிர் செற்ற - நிணத்தைத் தின்று செருக்குடன் சிவந்து வேந்தருயிரைக் கொன்ற; நெருப்புத்தலை நெடுவேல் கண்ணார் - நெருப்பில் தோய்ந்த நீண்ட வேல்போலும் கண்ணினார்; கண்ணீர் நிழல் மணிப்பூண் பரப்பினிடைப் பாய்ந்து குளமாய் - (பெய்த) கண்ணீர் ஒளிவிடும் மணிப்பூணாகிய கரையுள்ளே பாய்ந்து குளமாகி நிறைந்து; பால்ஆர் படாமுலையை வருத்தி - பால் நிறைந்த சாயா முலைகளை வருத்தி; மணி நெடுங் கோட்டு அருவிபோல வீழ்ந்தன - மணிகளையுடைய நீண்ட மாலைச் சிகரத்தினின்றும் விழும் அருவி போல (அம் முலைகளினின்றும்) வீழ்ந்தன. 
 | 
| 
    (வி - ம்.) நிணந்தின்று செருக்கி என மாறுக. மன்னர் - பகை மன்னர். மணி நெடுங்கோடு, முலைக்குவமை; அருவி, கண்ணீர்க் குவமை. 
 | 
( 346 ) | 
|  2945 | 
அழலேந்து வெங்கடுஞ்சொ லுருமே |   |  
|   | 
  றுண்டாங் கலர்சிந்தி |   |  
|   | 
நிழலேந்து பூங்கொடிக ணிலஞ்சோ்ந் |   |  
|   | 
  தாங்கு நிலஞ்சோ்ந்து |   |  
|   | 
கழலேந்து சேவடிக்கீழ்க் கண்ணீர் |   |  
|   | 
  வெள்ளங் கலநிரப்பக் |   |  
|   | 
குழலேங்கு மாறேங்கி யழுதார் |   |  
|   | 
  கோதை மடவாரே. |   | 
 
 
 |