| முத்தி இலம்பகம் |
1666 |
|
|
|
முலை வருடிச் சேந்து - பெரிய முலைகளைத் தடவிச் சிவந்து; காதல் கொண்டு இருந்த காமர் கைவிரல் -அன்புகொண்டிருந்த அழகிய கைவிரல்களே; அளிய நீரும் ஏதிலர் ஆகி - எம்மை அருளத்தக்க நீரும் எமக்கு அயலாராகி; கோமான் எண்ணமே எண்ணினீர் - அரசன் நினைவையே நினைத்தீர்! (இது தகுமோ?)
|
|
(வி - ம்.) 'செந்தீக்கடவுளை வலஞ்செய்து அது சான்றாக நும்மைப் பாதுகாப்பே மென்று எம் கைகளைப் பற்றின நீரும்' என்றலின் உம்மை உயர்வு சிறப்புப்பொருளது.
|
( 350 ) |
| 2949 |
பஞ்சிகொண் டெழுதி யார்ந்த | |
| |
சீறடி பனித்த லஞ்சிக் | |
| |
குஞ்சிமே லேற்ற கோமான் | |
| |
கொப்புளித் திட்ட வெம்மை | |
| |
வஞ்சித்தீர் மணிசெய் தோள்காள் | |
| |
வாங்குபு தழுவிக் கொள்ளீர் | |
| |
நெஞ்சநீர் வலியீ ராகி | |
| |
நிற்பிரோ நீரு மென்பார். | |
|
|
(இ - ள்.) மணிசெய் தோள்காள்! அணியணிந்த தோள்களே!; பஞ்சி கொண்டு எழுதி - செம்பஞ்சிக் குழம்பினால் எழுதி; ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சி - (அழகு) நிறைந்த சிற்றடிகள் (மெய்யிற்படின்) நடுங்குமென்றஞ்சி; குஞ்சிமேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை - தலையில் ஏற்ற அரசன் இனி நுகரேன் என்று கைவிட்ட எம்மை; நீர் வாங்குபு தழுவிக்கொள்ளீர் - நீர் அணைத்துத் தழுவிக்கொள்ளீர்; நீரும் நெஞ்சம் வலியீர் ஆகி நிற்பிரோ? - நீரும் உள்ளம் வலியீராகி நிற்பீரோ?; வஞ்சித்தீர் - (கைகள் எம்மைப் பற்றித் தெளிவிக்கும்போது உடனிருந்துதவிய நீவிர்) உண்மை கூறாமல் ஏமாற்றினீர்.
|
|
(வி - ம்.) 'நெஞ்சின்' என்ற பாடத்திற்கு 'நெஞ்சுபோல்' என்று உரை கூறுக. நீரும் : உம் : உயர்வு சிறப்பி
|
( 351 ) |
| 2950 |
முட்டுவட் டனைய கோல | |
| |
முத்துலாய்க் கிடந்து மின்ன | |
| |
மட்டுவிட் டலர்ந்த கோதை | |
| |
மதுவொடு மயங்கி நாளு | |
| |
மொட்டியிட் டுறைய வெங்கட் | |
| |
குயரணை யாய மார்ப | |
| |
நட்புவிட் டொழியு மாயி | |
| |
னன்மையார் கண்ண தம்மா. | |
|