பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1669 

லீர்!  (அத்தகைய நீர்) இப்போது அருளிலீர் ஆயினீர்; எம் வண்ணம் காண்மின் என்பார் - இனி எம் அழகு கெட்ட படியைக் காணுங்கோள் என்பார்.

   (வி - ம்.) பொதிர்த்தல் - புடைக்கொள்ளுதல். வெம்பிப் பொதிர்த்தன என மாறுக நாண் - ஈண்டுப் பொன்னாண். தீர்ப்பான் : வினையெச்சம். இன்பங்கொண்டு அதனை எமக்குத் தந்தீர் என்றவாறு. கண்ணிலீர் என்புழிக் கண் என்றது கண்ணோட்டம் என்றவாறு. கண்கள் : விளி.

( 355 )
2954 சென்னிமேன் மிதித்த வஞ்செஞ்
  சீறடித் திருவில் வீச
மின்னிவா ளாரஞ் சிந்த
  வெறுநிலத் துறைந்து நீயெ
மின்னகை முறுவல் பார்த்தா
  யின்றெம தாவி பார்த்தாய்
மன்னிய மாலை வண்டார்
  மணிமுடி வாழி யென்பார்.

   (இ - ள்.) மன்னிய மாலை வண்டு ஆர் மணிமுடி நிலைபெற்ற மாலையில் வண்டுகள் நிறைந்த நீலமணிபோலும் மயிர்முடியே!; சென்னிமேல் மிதித்த அம் செஞ்சீறடித் திருவில் வீச - (அரசன் வணங்கும்போது) அவன் முடியின்மேல் மிதித்த அழகிய சிவந்த சிற்றடிகள் அழகிய ஒளியை வீசவும்; வாள் ஆரம் மின்னிச் சிந்த - ஒளி பொருந்திய மாலை மின்னிச் சிந்தவும்; வெறுநிலத்து உறைந்து - வெறுந் தரையிலே படிந்து; நீ எம் இன்நகை முறுவல் பார்த்தாய் - நீ எம்முடைய இனிய புன்முறுவலை அன்று எதிர் நோக்கினை; இன்று எமது ஆவி பார்த்தாய் - இன்று எம் உயிர் வருந்துவதையும் பார்த்தாய்; வாழி என்பார் - வாழ்வாயாக! என்று நொந்து கூறுவர்.

   (வி - ம்.) நின் வழிபாடு பொய்யாயிருந்தது என்றபடி.

   வாழி : அசை எனினும் ஆம். என்பார் என்பார் என வருவனவற்றிற்கு 'ஆயினா' என வருவித்து. 'என்பாராயினார்' என முடிக்க. இத்துணையும் அரசனுடைய உறுப்புக்களை நோக்கிக் கூறிற்றாகத் தேவர் கூறினார்; 'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் - செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்' (தொல். பொருளியல். 2) என்னும் பொருளியற் சூத்திரத்தால் என்று கொள்க.

( 356 )
2955 வீங்குபாற் கடலு நஞ்சாய்
  விளைந்ததால் விரிந்த வெய்யோன்
பாங்கிலா விருளை யீன்று
  பார்மறைத் திட்ட தாலோ